கனடா காரை கலாச்சார மன்றம்
Canada – Karai Cultural Association
A non-profit corporate body in Ontario-Reg. No: 1100492
P O BOX 32057 MILLIKEN CROSSING PO MARKHAM, ON, M1V 0E1 .
E-mail: karainagar@gmail.com www.karainagar.com Tel: 416-642-4912
விஷேட பொதுக்கூட்டத்திற்கான அறிவித்தல்
கடந்த மே மாதம் 10ம் திகதி நடை பெற்ற பொதுக்கூட்டத்தின் தொடர்ச்சியாக ஒரு விஷேட பொதுக்கூட்டம் நடைபெறும் என்பதனை கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களூக்கும் தெரியபடுத்துகின்றோம். இக் கூட்டம் பின்வரும் இடத்தில் நடைபெறும்.
இடம் : Scarborough Civic Centre அறை இலக்கம் 1
காலம்: October 11,2015 9:00 AM to 12 :00 Noon.
நிகழ்வு அட்டவணை.
1. கடவுள் வணக்கம் / அக வணக்கம்
2. தலைவர் உரை
3. கடந்த இரண்டு பொதுக்கூட்ட அறிக்கைகள் வாசித்தல்
4. கடந்த நிர்வாக சபையியின் செயலாளர்அறிக்கை சமர்ப்பித்தல்
5. கணக்காய்வாளரின் அறிக்கை சமர்ப்பித்தல்
6. புதிய யாப்பினை பொது சபை அங்கீகாரத்திற்கு சமர்ப்பித்தல்.
7. 2013 – 2015 ஆண்டு கால வரவு செலவு கணக்கு அறிக்கையினையும், கணக்காய்வாளர் அறிக்கையினையும் பரிசீலணை செய்தலும் அது பற்றிய கலந்துரையாடலும்.
8. அங்கத்தவர்கள் வருட சந்தா , நிர்வாக சபை / போஷகர் சபை அங்கத்தவ்ர்களின் எண்ணிக்கை பற்றிய தீர்மானம் எடுத்தல்.
9. வேறு பிரேரணைகளும், கேள்வி பதில் நேரமும்.
10. புதிய நிர்வாக சபைத் தலைவர் தெரிவு
இடை வேளை
11. நிர்வாக சபை அங்கத்தவர்கள் / வெற்றிடமாகும் போஷகர் சபை அங்கத்தவர்கள் / கணக்காய்வாளர் தெரிவு.
12. புதிய நிர்வாக சபைத்தலைவர் உரை.
13. நன்றி உரை.
இக் கூட்டத்தில் 2013 / 2014 / 2015 ம் வருடங்களில் ஏதாவது ஒரு வருட சந்தா செலுத்தியவர்களும் , ஆயுள் கால உறுப்பினர்களும் கலந்து கொள்ளலாம். மண்டப வாயலிலும் வருட சந்தா பணம் செலுத்தி அங்கத்துவ தகைமையினை பெற்றுக் கொள்ளலாம் அல்லது புதுப்பித்துக் கொள்ளலாம்.
நிகழ்வு அட்டவணையில் மேலே குறிப்பிட்ட விடயங்களுடன் வேறு ஏதாவது விடயங்கள் சேர்க்கப்பட வேண்டுமென அபிப்பிராயப்பட்டால், அந்த விடயம் சம்பந்தமான விபரங்களை ஒக்டோபர் 6 ம் திகதி நள்ளிரவு 12:00 க்கு முன்புkarainagar@gmail என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். இந்த வேண்டுகோள் போஷகர் சபை / தற்காலிக நிர்வாக சபையினால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியானவை நிகழ்வு அட்டவணையில் சேர்க்கப்படும்.
நிர்வாக சபை / போஷகர் சபை அங்கத்தவர்களுக்கான கணக்காய்வாளருக்கான தேர்தல்.
யாப்பின்படி அனைத்து வெற்றிடங்களுக்கும் தேர்தல் நடைபெறும். அதற்கான விண்ணப்ப படிவங்களை மண்டப வாசலில் பெற்று பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். இரகசிய வாக்கெடுப்பு முறை மூலமே அங்கத்தவர்கள் தேர்ந்து எடுக்கப் படுவார்கள்.
மீளாய்வு செய்யப்ப்ட்ட யாப்பு மீண்டும் எமது இணையத் தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே பொதுமக்களின் பார்வைக்கும் / கருத்து பரிமாற்றத்துக்கும் உட்படுத்தப்பட்டது. இதனால் யாப்பு பொது சபை உறுப்பினர்களின் சம்பிரதாய வாக்கெடுப்பிற்கு நேரடியாக விடப்படும்.
கடந்த நிர்வாக சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையும் பொது மக்களின் பார்வைக்காக இணைய தளத்தில் பிரசுரிக்கப்ப்ட்டுள்ளது. இதனைகணக்காய்வாளர் சிபார்சு செய்யவில்லை என்பதனை கவனத்தில் கொள்ளவும்
மண்டபநேரம் மட்டுப் படுத்தப்பட்ட கால இடைவெளியாக ( மூன்று மணித்தியாலங்கள் மாத்திரம் ) இருப்பதால் பொது மக்ககளை சரியாக காலை9:00 க்கே மண்டபத்தில் கூடும்படி அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம். கூட்ட நடவடிக்கைகள் சரியாக காலை 9:30 க்கு ஆரம்மமாகும். கூட்டதுக்கு வரும் அனைவரும் ஒன்று சேர்ந்து கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஆரோக்கியமான எதிர் காலத்தினை கருத்தில் கொண்டு அமைதியான முறையில்இ தடங்கலின்றி கூட்டத்தினை நடாத்த எல்லோருடைய அன்பான ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றோம்.
தொடர்ந்து விபரங்கள் இதே இணையத்தளத்தில் எடுத்து வரப்படும் என தெரிவித்து கொள்கின்றோம் இக்கூட்டம் சம்பந்தமான மேலதிக விபரங்கள் தேவைப்படின்
Tel: 416-642-4912 ல் அல்லது karainagar@gmail
மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.
இவ்வண்ணம்
போஷகர் சபை / தற்காலிக நிர்வாக சபை.
No Responses to “கனடா – காரை கலாச்சார மன்றத்தின் விஷேட பொதுக்கூட்டத்திற்கான அறிவித்தல்”