சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டி- 2015
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு
திருக்குறள்- அதிகாரம் –கல்வி
எமது கிராமத்தின் எதிர்கால அறிஞர்களை உருவாக்கும் நோக்குடனும் புலத்திலும் தாயகத்திலும் கல்வி பயிலும் மாணவ,மாணவிகளை ஒன்றிணைக்கும் வண்ணமும் காரைநகரைப் பிறப்பிடமாகவோ, பூர்விகமாகவோ கொண்ட மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி (26.09.2015) பிற்பகல் 3.00மணி யிலிருந்து பிற்பகல்பகல் 5.00மணி வரை காரைநகர் காலநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய சயம்பு ஞாபகார்த்த மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் கன்னி முயற்சியாக கட்டுரைப் போட்டி –2014 இலத்திரனியல் மூலமாக நடாத்தப்பட்டது. இதில் காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய மாணாக்கர் எண்மரும், கொழும்பு இந்துக்கல்லூரி மாணவரொருவரும் பங்குபற்றியிருந்தனர். அவர்கள் மணிவாசகர் விழாவில் விருதுகளும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப் பட்டமை யாவரும் அறிந்ததே!
இம்முறை போட்டியாளர்களின் பங்குபற்றலை அதிகரிக்கவும், பரிசில்களை அதிகரித்து அதிகளவு மாணாக்கரை ஊக்குவிக்கவும் எமது சபை தீர்மானித்தது. அதற்கமைய கட்டுரைப் போட்டி இயற்திறன் முறையில் பின்வரும் மூன்று பிரிவுகளில் நாடாத்தப்பட்டன
(அ) கீழ்ப்பிரிவு 7ஆம், 8ஆம், 9ஆம் கல்வியாண்டு மாணவர்கள்.
(ஆ) மத்தியபிரிவு 10ஆம்,11ஆம், கல்வியாண்டு மாணவர்கள.
(இ) மேற்பிரிவு 12ஆம்,13ஆம் பாடாலையில் கல்வி பயிலும் மாணவர்களும், இவ்வாண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கல்விபயிலும் மாணவர்கள்
கட்டுரைப்போட்டி- 2015 எமது சபையினால் உருவாக்கப்பட்டுள்ள கலை, கல்வி, மற்றும் மொழி மேம்பாட்டுக் குழுவின் உறுபினர்களாகிய ஒய்வுநிலை அதிபர் பண்டிதர். மு.சு வேலாயுதபிள்ளை, ஒய்வுநிலை ஆசிரியர் கலாபூஷ்ணம் யோகலட்சுமி சோமசுந்தரம், சுவிஸ் சரஸ்வதி வித்தியாலய அதிபர் திருமதி தாரணி சிவசண்முகநாதசர்மா, கலாநிதி கென்னடி விஜயரத்தினம் (எதியோப்பியா), வவுனியா, சித்தி விநாயகர் வித்தியாலய பிரதி அதிபர் திரு.அருணாசலம் வரதராஜன். ஆகியோரின் முயற்சியினாலும், காரைநகர் அபிவிருத்தித் தலைவர், ஒய்வு நிலை வடமாகாண கல்விப் பணிப்பாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களின் அளப்பரிய முயற்சியினாலும், யாழ்பல்கலைக்கழ சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி வீரமங்கை யோகரட்ணம் காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய அதிபர் திருமதி வாசுகி தவபாலன், யாழ்ற்றன் கல்லூரி அதிபர் திரு.வே. முருகமூர்த்தி, சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய பிரதிஅதிபர் திருமதி கமலாம்பிகை லிங்கேஸ்வரன் ஆகியோர்களது ஓத்துழைப்புடனும், பரீட்சைக்கான வேலைத்திட்டங்கள் வெகுசிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டன.
யா/கலாநதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம், யா/காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி, யா/சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக்கல்லாரி, யா/வேம்படிமகளீர் கல்லூரி, கொழும்பு இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளிலிருந்து காரைநகரைப் பூர்விகமாகக் கொண்ட மாணாக்கர் போட்டியிலன்று 14.30மணிக்கு தத்தமது பாடசாலைச் சீருடையில் மண்டபத்திற்கு சமூகமளித்திருந்தனர். ஏக கால நேரத்தில் சூரிச் சரஸ்வதி வித்தியாலய மாணவிகள் இருவர் பரீட்சைக்குத் தயாராகியிருந்தனர்.
கட்டுரைப் போட்டியின் தலைமை மேற்பார்வையாளாராக காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர், ஒய்வு நிலை வடமாகாண கல்விப் பணிப்பாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களும், கட்டுரைப் போட்டியின் ஒருங்கிணைப்பாளராகக் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் அவர்களும் கணணித் தொழில்நுட்ப இணைப்பாளராகத் திரு. சிவகுருநாதன் பிரபாகரன் அவர்களும், மேற்பார்வையாளார்களாகப் பின்வருவோரும் சிறப்புறச் சேவையாற்றினார்கள்.
1. ஒய்வுநிலை அதிபர் பண்டிதர். மு.சு வேலாயுதபிள்ளை அவர்கள்
2. ஒய்வுநிலை ஆசிரியர் கலாபூஷ்ணம் யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்கள்
3. யாழ்ற்றன் கல்லூரி அதிபர் திரு.வே. முருகமூர்த்தி அவர்கள்
4. கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்கள்
5. சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலயப் பிரதி அதிபர் திருமதி கமலாம்பிகை லிங்கேஸ்வரன் அவர்கள்
6. வவுனியா சித்தி விநாயகர் வித்தியாலயப் பிரதி அதிபர் திரு.அருணாசலம் வரதராஜன் அவர்கள்
7. வவுனியா சித்தி விநாயகர் வித்தியாலய ஆசிரியர் திருமதி பராசக்தி வரதராஜன் அவர்கள்
8. யாழ்ற்றன் கல்லூரி ஆசிரியர் திரு.ந.கிருஷ்ணபவான் அவர்கள்
9. மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் விஜயரத்தினம் பிரேமதாஸ் குமாரஸ்ரீ அவர்கள்
10. கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய ஆசிரியர் திரு.ச.லிங்கேஸ்வரன் அவர்கள்
11. செல்வி றேனுகா செல்வராஜா அவர்கள்
12. சுவிற்சர்லாந்தில் சரஸ்வதி வித்தியாலய அதிபர் திருமதி தாரணி சிவசண்முகநாதசர்மா அவர்கள்
கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய சயம்பு மண்டபம் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் மாணக்கர் என நூற்றுக் கணக்கானோரால் நிறைந்திருந்தது. முதல் நிகழ்ச்சியாகக் தேவாரம். அடுத்ததாகச் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மன்ற கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் நீத்தாருக்கான அகவணக்கம் செலுத்தப்பட்டது. மாணவர்கள் தங்களது அனுமதி அட்டையைப் பூர்த்தி செய்தபின் போட்டி பிற்பகல் 3.00மணிக்கு ஆரம்பமாகி 5.00மணிக்கு நிறைவுபெற்றது. எல்லோரும் குளிர்பானம் அருந்தியபின் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் அகத்திலும், புலத்திலும் உள்ள மாணாக்கரை ஒன்றிணைத்து இக் கட்டுரைப்போட்டியை நடாத்தியமை காரைநகரின் நீண்ட நெடிய கல்வி வரலாற்றில் ஒரு பொன்னாள் என்பது மிகையில்லை.
நிகழ்வின் நிழற்படங்களை கிழேகாணலாம்.
வினாக்கொத்தினையும் கிழேகாணலாம்
நன்றி
“நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்”
இங்ஙனம்,
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
செயற்குழு உறுப்பினர்கள்,
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
28.09.2015
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்தும்
கட்டுரைப் போட்டி – 2015
26.09.2015
வினாக் கொத்து
அ. கீழ்ப்பிரிவு
பின்வரும் தலைப்புக்களில் ஒன்றைத் தெரிவு செய்து தெளிவான கையெழுத்தில் இரண்டு அல்லது மூன்று பக்கங்களில் கட்டுரை வரைக.
1. சமய குரவர் நால்வரில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர் சைவ சமயத்திற்கு ஆற்றிய தொண்டைப் பற்றி கட்டுரை வரைக.
2. “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு”. இக்கூற்றை விளக்கிக் கட்டுரை வரைக.
3. இசைக் கலை அல்லது நடனக் கலையின் முக்கியத்துவம் பற்றிக் கட்டுரை வரைக.
4. நீர் விரும்பும் காரைநகர்ப் பெரியார் ஒருவர் பற்றிக் கட்டுரை வரைக.
5. காரைநகர் மணிவாசகர் சபை குறித்துக் கட்டுரை வரைக.
வினாக் கொத்து
ஆ. மத்தியபிரிவு
பின்வரும் தலைப்புக்களில் ஒன்றைத் தெரிவு செய்து தெளிவான கையெழுத்தில் மூன்று அல்லது நான்கு பக்கங்களில் கட்டுரை வரைக.
1. காரைநகர் அபிவிருத்திச் சபை அல்லது நீரறிந்த ஓர் சமூக மேம்பாட்டு நிறுவனம் பற்றிக் கட்டுரை வரைக.
2. பின்வரும் காரைநகர்ப் பெரியார்களுள் ஒருவர் பற்றிக் கட்டுரை வரைக:
அ. வைத்தீசுவரக்குருக்கள்
ஆ. கலாநிதி ஆ. தியாகராசா
இ. சயம்பு வாத்தியார்
3. ஊரின் சீரிய வளர்ச்சியில் ஆன்மீகத்தின் பங்கு பற்றிக் கட்டுரை வரைக.
4. திருக்குறளின் மகத்துவம் அல்லது பாரதியாரின் பாடல்கள் குறித்துக் கட்டுரை வரைக.
5. “பிச்சை புகினும் கற்கை நன்றே”. இக்கூற்றை விளக்கிக் கட்டுரை வரைக.
வினாக் கொத்து
இ. மேற்பிரிவு
பின்வரும் தலைப்புக்களில் ஒன்றைத் தெரிவு செய்து தெளிவான கையெழுத்தில் நான்கு அல்லது ஆறு பக்கங்களில் கட்டுரை வரைக.
1. தமிழர் திருமண சம்பிரதாயத்தில் “சீதனம்” பற்றிய உமது கருத்து யாது?
2. காரைநகர் மேம்பட நாம் செய்ய வேண்டிய முக்கியமான முதல் ஐந்து விடயங்கள் யாவை? விளக்குக.
3. “அறிவே அனைத்து ஆற்றலும்” இக்கூற்றை விளக்கிக் கட்டுரை வரைக.
4. பின்வரும் காரைநகர்ப் பெரியார்களுள் ஒருவர் பற்றிக் கட்டுரை வரைக:
அ. அருணாசல உபாத்தியாயர்
ஆ. சங்கநூற் செல்வர் பண்டிதர் சு. அருளம்பலவனார்
இ. அலன் ஏபிரகாம்
5. புலம் பெயர் மக்கள் மத்தியில் தமிழ் மொழியின் எதிர்காலம்.
No Responses to “சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டி- 2015”