எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு – குறள்
கடந்த 26–9-2015 அன்று காரை அபிவிருத்தி மற்றும் கல்வி வரலாற்றில் முக்கியமான நாள்களிலொன்றாகப் பதியப்பெறும். ஏறத்தாள நூறு மாணவர்கள் காரைநகரிலும் சூரிக் நகரிலும் ஏககாலத்தில் கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டார்கள். இம்முறை மூன்று பிரிவுகளாகப் போட்டி இடம்பெற்றதும் போட்டிக்கான தலைப்புக்கள் மண்டபத்திலேயே மாணாக்கருக்கு வழங்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்க விடயங்கள். எதிர்காலத்தில் இலண்டன், பாரிஸ், ஒஸ்லோ, ரொரன்ரோ, சிட்னி ஆகிய நகரங்களிலும் உள்ள காரை மாணவச் செல்வங்களை சிறியளவிலேனும் இணைத்து இப்போட்டியை நடாத்துவதற்கு அவ்வந்நாட்டு காரையூர்ச் சங்க நிர்வாகிகளைத் தாழ்மையுடனும் உறவின்பாற்பட்ட உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறோம்.
எமது சபை மாணாக்கரின் தொழில்சார் நிபுணத்துவம், மொழித்திறன், கலை, கல்வி, விளையாட்டுத்துறை போன்ற விடயங்களை மேம்படுத்தும் முகமாகக் கலை, கல்வி, மற்றும் மொழி மேம்பாட்டுக் குழு ஒன்றினை உருவாக்கி ஊக்கமளித்து வருகின்றது. இக் குழு இரண்டாவது வருடமாக உலகில் பரந்துவாழும் காரைநகர் மாணக்கருக்கான கட்டுரைப் போட்டியை காரைநகர் காலநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய சயம்பு ஞாபகார்த்த மண்டபத்திலும், சுவிஸ் சரஸ்வதி வித்தியாலயத்திலும் வெகுசிறப்பாக நடாத்தி முடித்துள்ளது.
கலை, கல்வி, மற்றும் மொழி மேம்பாட்டுக் குழுவின் உறுபினர்களாகிய ஒய்வுநிலை அதிபர் பண்டிதர். மு.சு வேலாயுதபிள்ளை அவர்களுக்கும், ஒய்வுநிலை ஆசிரியர் கலாபூஷ்ணம் யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களுக்கும், சுவிஸ் சரஸ்வதி வித்தியாலயத்தில் இருந்து மேற்பார்வையாளராக கடமையாற்றிய திருமதி தாரணி சிவசண்முகநாதசர்மா அவர்களுக்கும், போட்டி ஓருங்கிணைப்பாளராக யேர்மனியில் இருந்து செயற்பட்ட கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்களுக்கும், வவுனியா சித்தி விநாயகர் வித்தியாலய பிரதி அதிபர் திரு.அருணாசலம் வரதராஜன் அவர்களுக்கும். கட்டுரைப் போட்டியின் தலைமை மேற்பார்வையாளார்களாக காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர், ஒய்வு நிலை வடமாகாண கல்விப் பணிப்பாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களுக்கும், யாழ்பல்கலைக்கழ சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி வீரமங்கை யோகரட்ணம் அவர்களுக்கும், காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்களுக்கும், யாழ்ற்றன் கல்லூரி அதிபர் திரு.வே. முருகமூர்த்தி அவர்களுக்கும், சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய பிரதிஅதிபர் திருமதி கமலாம்பிகை லிங்கேஸ்வரன் அவர்களுக்கும், காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய ஆசிரியர் திரு. ச. லிங்கேஸ்வரன் அவர்களுக்கும், மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் விஜயரத்தினம் பிரேமதாஸ் குமாரஸ்ரீ அவர்களுக்கும், வவுனியா சித்தி விநாயகர் வித்தியாலய ஆசிரியர் திருமதி பராசக்தி வரதராஜன் அவர்களுக்கும், யாழ்ற்றன் கல்லூரி ஆசிரியர் திரு.கிருஷ்ணபவான் அவர்களுக்கும், செல்வி. றேனுகா செல்வராஜா அவர்களுக்கும், தொடர்பாடல் இணைப்பாளரான யாழ்ற்றன் கல்லூரி ஆசிரியர் திரு. சிவகுருநாதன் பிரபாகரன் ஆகியோருக்கும் எமது சபையினர் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
இக்கட்டுரைப் போட்டியைச் சிறப்பாக நடாத்துவதற்கு காரைநகர் காலநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய சயம்பு ஞாபகார்த்த மண்டபத்தை தந்துதவிய அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை சமூகத்தினருக்கும், மாணக்கர் எழுதுவதற்கான தாள்களையும், அனுமதி அட்டையையும் உருவாக்கி தந்த வவுனியா வாணி அச்சகத்தாருக்கும், மாணக்கரை ஊக்கமளித்து போட்டியில் பங்குபற்றச் செய்த அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், இன்னும் பல வழிகளில் பிரதி பலன் எதிர்பாராது உதவிகள் செய்த அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள் உரித்தாகுக.
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
செயற்குழு உறுப்பினர்கள்,
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
14. 10. 2015
No Responses to “சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டி- 2015- நன்றிக்குரியோர்”