எமது நேச அமைப்பான கனடா காரை கலாசார மன்றத்தின் பொதுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(11.10.2015) அன்று நடைபெற்றிருந்தது. இப்பொதுக்கூட்டத்தில் திரு.ரவி ரவீந்திரன் தலைமையிலான புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மொரட்டுவ பல்கலைக் கழக பொறியியல் பட்டதாரியும் பிரபல வீடு விற்பனை முகவருமான திரு.ரவி ரவீந்திரன் அவர்கள் நீண்ட காலமாக கனடா-காரை கலாசார மன்றத்தின் பிரதான அநுசரணையாளர்களில் ஒருவரும் பல பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்த அநுபவம் உள்ளவர் என்ற வகையிலும் அவர் தலைமையிலான புதிய நிர்வாக சபை அனைத்துத் தரப்பினருடனும் சுமூகமான நல்லுறவினைப் பேணுவதுடன் இதயசுத்தியுடனும் நேர்மையுடனும் மன்றத்தை வளர்ச்சிப் பாதையில் நகர்த்திச் செல்லும் என்று நம்பப்படுகின்றது.
இந்நிலையில் புதிய நிர்வாக சபைக்கு கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கம் தனது வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்திருக்கின்றது.
அவ்வாழ்த்துச் செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
திரு.ரவி ரவீந்திரன்
தலைவர்
கனடா-காரை கலாசார மன்றம்
அன்புடையீர்!
புதிய நிர்வாக சபையை வாழ்த்துகின்றோம்!
தங்களது தலைமையில் அமைந்துள்ள கனடா-காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாக சபையை கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றது.
அனுபவமும் ஆளுமையும் மிக்க தங்களது வழிகாட்டலுடன் காரை மண்ணின்; முன்னேற்றகரமான திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட புதிய நிர்வாக சபை உழைக்கும் என நம்புவதுடன் மன்றத்தின் வருடாந்த நிகழ்வுகளை திட்டமிட்டு சிறப்பாக நிறைவு செய்யும் எனவும் நம்புகின்றோம்.
அதேவேளை எமது நேச அமைப்பாக விளங்கும் கனடா-காரை கலாசார மன்றத்திற்கும் பழைய மாணவர் சங்கத்திற்கும் இடையேயான நல்லுறவு வலுப்பெற்று மேம்பட்டு விளங்கும் எனவும் நம்புகின்றோம்.
மு.வேலாயுதபிள்ளை கனக.சிவகுமாரன் மா.கனகசபாபதி
தலைவர் செயலாளர் பொருளாளர்
முழுமையான வாழ்த்துச் செய்தியைக் கீழே காணலாம்.
No Responses to “கனடா-காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாக சபைக்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வாழ்த்து”