கட்டுரைப் போட்டி-2015 இறுதிச் சுற்று மதிப்பீட்டுக்குத் தெரிவான போட்டியாளர்களின் சுட்டெண்கள்.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
கடந்த 26–9-2015 அன்று சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியின் ஆ.இரண்டாம் பிரிவு மற்றும் இ.மூன்றாம் பிரிவுகளில் கலந்துகொண்டவர்களில் முறையே 11 மற்றும் 8 போட்டியாளர்களின் கட்டுரைகள் இறுதிச் சுற்று மதிப்பீட்டிற்காக நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பதைப் போட்டியாளர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம். கட்டுரைகளின் மதிப்பீடு சுட்டெண்களின் அடிப்படையிலேயே தற்போது இடம்பெறுகின்றது.
தீர்ப்பின் தராதரம் மற்றும் ஒருபாற்க் கோடாத நிலையை உறுதிசெய்யும் முகமாகவும் நடுவர்களதும் ஒருங்கிணைப்பாளரதும் தீர்மானத்திற்கு அமையப் போட்டியாளர்களின் பெயர்கள் இறுதி முடிவுகளின் போதே அறிவிக்கப்படும். முதற்பிரிவில் (அ) இறுதிச் சுற்று மதிப்பீட்டிற்குத் தெரிவான முதற் பத்துக் கட்டுரையாளர்களின் சுட்டெண்கள் மிக விரைவில் அறியத்தரப்படும். பிரிவு வாரியான தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையாளர்களின் சுட்டெண்கள் கீழே தரப்பட்டுள்ளன.
ஆ. இரண்டாம் பிரிவு | இ. மூன்றாம் பிரிவு |
053 | 101 |
057 | 102 |
059 | 104 |
066 | 110 |
073 | 112 |
074 | 113 |
077 | 117 |
078 | 118 |
079 | |
080 | |
082 |
தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை எமது சபையினர் நூலாக வெளியிடும் எண்ணம் கொண்டுள்ளதால் மேற்படி சுட்டெண்களுக்குரிய கட்டுரையாளர்கள் தமக்கு அணுக்கமான ஆசிரியர்கள், அதிபர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், கல்விமான்கள் ஆகியோரின் உதவியோடு தத்தம் ஆக்கங்களை மொழி, கருத்தாளம், மேற்கோள், உரைநடை, வாதத்திறன், எடுத்துரைப்பு முறை, தகவற் செறிவு ஆகிய தளங்களில் செழுமைப்படுத்துமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம். தங்களுக்கு இவ்விடயத்தில் உதவி தேவைப்படின் எமது மின்னஞ்ஞலுக்கு அறியத்தரவும். மகிழ்ச்சியுடன் உதவத்தயாராக உள்ளோம்.
செழுமைப்படுத்தப்பட்ட கட்டுரைகள் 27-11-2015 வெள்ளிக்கிழமைக்கு முன்பதாக எமது karaithenral2014@gmail.com என்ற மின்னஞ்ஞல் முகவரிக்கு அனுப்பவும். பதிப்புக்கான செழுமைப் படுத்தப்பட்ட கட்டுரைகள் பாமினி எழுத்துருவில் 14 எழுத்தளவில் 1.5 எழுத்திடைவெளியில் நான்கிலிருந்து எட்டுப் பக்கங்களுள் அடங்கியனவாக இருத்தல் வேண்டும்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்.
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை செயற்குழு உறுப்பினர்கள்,
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
21. 10. 2015
No Responses to “சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டி-2015 இறுதிச் சுற்று மதிப்பீட்டுக்குத் தெரிவான போட்டியாளர்களின் சுட்டெண்கள்”