அறிவித்தல்“காரை வசந்தம் – 2015”
கனடா காரை கலாச்சார மன்றத்தின் காரை வசந்தம் 2015 எதிர்வரும் டிசம்பர் மாதம் 19ம்திகதி நடைபெறவுள்ளது. மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள்மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. பரதநாட்டியம், சங்கீதம்,நாடகம் உட்பட அனைத்து வகையான முத்தமிழ் நிகழ்வுகளுடன் சுவாரசீகமான நிகழ்ச்சிகள்எதிர்பார்க்கப்படுகின்றன.
மிருதங்க கலாவித்தகர் திரு.ரதிரூபன் பரஞ்சோதி அவர்களால் “லயபிருந்தம்” என்னும் இசை நிகழ்ச்சி நடாத்தப்படவிருக்கிறது. இதில் பங்கு பற்ற ஆர்வமாயுள்ளவர்கள் பின்வரும் துறைகளில் ஆகக்குறைந்தது தரம் இரண்டு(Grade2) சித்தியடைந்திருத்தல் வேண்டும் சங்கீதம், மிருதங்கம், வீணை , வயலின், புல்லாங்குழல், Keybord.
ஆர்வமுள்ள சிறுவர், சிறுமியர் திரு. தர்மலிங்கம் பரமசிவம் அவர்களை 416 459 0766 என்றஇலக்கத்தில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
விழா நிகழ்வின் போது தமிழ் தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், மன்ற கீதம் என்பவற்றினைஇசைப்பதற்கு ஆர்வமுள்ள சிறுவர், சிறுமியர் திரு.தவராஜா சங்கரப்பிள்ளை அவர்களை 416 845 4599 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ‘காரை வசந்தம் –2015‘ நிகழ்விற்காகவெளியிடப்படவிருக்கின்ற விழா மலரிற்கு கனடாவிலும் உலக நாடுகளிலும் வதியும்காரைநகர் உறவுகளிடம் இருந்து ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ‘காரை வசந்தம் 2015‘மலர் சிறப்படைய கட்டுரைகள், செய்திகளை வழங்கவும் கனடா காரை கலாச்சாரமன்றத்தின் விழா மலர் குழு உறுப்பினர்களை தொடர்பு கொள்ளவும்.
காரை வசந்தம் 2015 விழா மலர் குழு
1. திரு.கனக சிவகுமாரன் 647 766 2522
2.திரு.மா.கனகசபாபதி 416 267 6999
கலை நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கும் சிறுவர்கள், ஆசிரியர்கள், பெரியோர்கள்நவம்பர் 06, 2015 ற்கு முன்னர் கலைவிழா குழுவுடன் தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுமாறுகேட்டுக் கொள்கின்றோம்.
திரு.சுதாகரன் பஞ்சாட்சரக்குருக்கள் 416 720 9303
திரு. மயூரன் வேலாயுதம்பிள்ளை (இணைப்பாளர்) 905 580 9275
கனடா-காரை கலாச்சார மன்றத்துடனான மேலதிக தொடர்புகளுக்கு
நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்
No Responses to “கனடா காரை கலாச்சார மன்றத்தின் காரை வசந்தம் 2015”