மரண அறிவித்தல்
திருமதி நாகேஸ்வரி மகேசன்
தோற்றம் : 18-02-1945 மறைவு: 31-05-2022
காரைநகர், வலந்தலை, சயம்பு வீதியைப் பிறப்பிடமாகவும், சம்பந்தர்கண்டி, பம்பலப்பிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகேஸ்வரி மகேசன் அவர்கள் 31.05.2022 இல் சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற தில்லையம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நவசிவாயம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளுமாவார்.
காலஞ்சென்ற நவசிவாயம் மகேசன் (ஓய்வுபெற்ற பொறியியலாளர்) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
புவனராஜா, தவராஜா, ரகுபரன், தயாபரன், தேவசுதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஞானகி, ஸ்றைப்பினி, சிவஜா, செக்கியா, ஆகியோரின் அன்பு மாமியும், ராகுல், விஷால், சாம்சன், ஜெயடன், தனிஷா, றாகவி, தானியா, றேடன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
காலஞ் சென்றவர்களான சிவசம்பு, தேவராசா, தர்மலிங்கம், மற்றும் விசுவலிங்கம் ஆகியோரின் பாசமிகு தங்கையும், காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி, மற்றும் இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05.06.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு கிரியைகள் நடைபெற்று பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்புகளுக்கு:
சகோதரர் திரு. தி. விசுவலிங்கம் – +1 905. 566. 4822
சகோதரி திருமதி இராஜேஸ்வரி கணேசமூர்த்தி – +94 77 612 1239
பெறாமகள் திருமதி அன்னபாக்கியம் சிவபாதசுந்தரம் +94 77 780 2711
No Responses to “மரண அறிவித்தல், திருமதி நாகேஸ்வரி மகேசன்(காரைநகர், வலந்தலை, சயம்பு வீதி)”