கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) கல்வித்தாய் கலைமகளைப் போற்றி வணங்கும் வாணி விழா கடந்த 22.10.215 அன்று கல்லூரியின் இந்துமா மன்றத்தின் ஏற்பாட்டில் பொறுப்பாசிரியைகள் திருமதி.சங்கீதா பிரதீபன், செல்வி.சிவரூபி நமசிவாயம் ஆகியோரின் வழிநடத்தலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஆண்டுதோறும் நவராத்திரி காலங்களில் பாடசாலை நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைமகள் கோவிலில் கொலு வைக்கப்பட்டு தினமும் கூட்டு வழிபாடு நடைபெற்று சொற்பொழிவுகள், கலைநிகழ்வுகள் இடம்பெற்று இறுதிநாளில் வாணி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழமையாகும்.
அந்த வகையில் இவ்வாண்டும் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் இந்துமா மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு கல்லூரியின் நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற வாணிவிழா கல்லூரியின் பகுதித் தலைவர் திரு.தெ.லிங்கேஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அன்றைய தினம் நடராசா ஞாபகார்த்த மண்டப முன்றலில் சிறப்பான பொங்கல் பொங்கி கதிரவனுக்கு படையல் செய்து வழிபாடு செய்யப்பட்டது. மண்டபத்தில் உள்ள கலைமகள் கோவிலில் நடைபெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றன. அடுத்து வாணி விழாவினையொட்டி பாடசாலையில் நடத்தப்பட்ட கோலமிடுதல், மாலை கட்டுதல், பண்ணிசை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.
விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “கல்லூரியில் நடைபெற்ற கலைமகள் விழா”