கோவிட்-2019 நெருக்கடி நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக சபைத் தெரிவிற்கான ஆண்டுப் பொதுக் கூட்ட அறிவித்தல்.
‘உனக்கு நீயே உண்மையாய் இரு’
காரைநகர் இந்துக் கல்லூரி
பழைய மாணவர் சங்கம் – கனடா
ஆண்டுப் பொதுக் கூட்டம்
இடம்: Scarborough Civic Centre, Committee Room # 1
காலம்: 2022 யூலை 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: முற்பகல் 9.30மணி
தலைமை: திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் அவர்கள்
நிகழ்ச்சி நிரல்
1.கடவுள் வணக்கம், அக வணக்கம்
2.பாடசாலைப் பண் இசைத்தல்
3.தலைவர் முன்னுரை
4.சென்ற ஆண்டுப் பொதுக் கூட்டஅறிக்கை சமர்ப்பித்தலும் அங்கீகாரமும்.
5. 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளுக்குரிய செயற்பாட்டு அறிக்கை சமர்ப்பித்தலும் அங்கீகாரமும்.
6. 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளுக்குரிய வரவு–செலவு அறிக்கைகள் சமர்ப்பித்தலும் அங்கீகாரமும்.
7.புதிய நிர்வாக சபை தெரிவு: தலைவர், உப-தலைவர், செயலாளர், உதவிச் செயலாளர், பொருளாளர், உதவிப் பொருளாளர் ஆகிய உத்தியோகத்தர்களும் ஜந்து நிர்வாக சபை உறுப்பினர்களும் விண்ணப்பித்தோர் மத்தியிலிருந்தும் விண்ணப்பம் கிடைக்கப்பெறாத பதவிகளிற்கு சமூகமளித்துள்ள உறுப்பினர்கள் மத்தியிலிருந்தும் தெரிவுசெய்யப்படுவர்.
நிர்வாக சபை தெரிவுமுறை தொடர்பான விபரம் தனியே பிரசுரிக்கப்பட்டுள்ளது.
8;.போசகர், கணக்காய்வாளர் ஆகியோரின் தெரிவு.
9.புதிய தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டு உரையாற்றுதல்
10.அ)உறுப்பினர் பிரேரணைகள்: ஆ)யாப்புக்கான திருத்தப் பிரேரணைகள்
28-06-2022ஆம் திகதிக்கு முன்பாக செயலாளருக்கு எழுத்து மூலமாக அனுப்பிவைக்கப்படும் பிரேரணைகள் மட்டுமே கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பதை தயவுசெய்து கவனத்திற்கொள்ளவும்.
11.வேறுவிடயங்கள்
12.அங்கத்தவர் கருத்துரைகள்
13.நன்றியுரையும் கூட்டத்தின் நிறைவும்.
மின்னஞ்சல் முகவரி: karaihinducanada@gmail.com
தொலைபேசி: 416-804 0587
உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ளுமாறு தயவாக வேண்டுகின்றோம்.
நா.குஞ்சிதபாதம் கனக.சிவகுமாரன் தி.சந்திரசோதி
தலைவர் செயலாளர் பதில் பொருளாளர்
No Responses to “கோவிட்-2019 நெருக்கடி நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக சபைத் தெரிவிற்கான ஆண்டுப் பொதுக் கூட்ட அறிவித்தல்.”