தேசிய விவகார அமைச்சினால் நடத்தபட்ட கலாசாரப் போட்டியில் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம. வித்தியாலயத்திலிருந்து கலந்து கொண்ட மாணவர்கள் ஐந்து போட்டிகளில் வெற்றிபெற்று தேசிய மட்டப்போட்டியில் பங்குபற்றுகின்ற தகமையைப்பெற்றுள்ளனர்.
இளம் பாடகருக்கான போட்டியில் செல்வி ஆ.அமிர்தாவும் சாஸ்திரிய நடனத்தில் செல்வி.ச.கவிதாவும் சித்திரத்தில் செல்வன் க.சசிதரனும் அறிவிப்பாளருக்கான போட்டியில் செல்வன் க.வினோதனும் கிராமிய நடனத்தில் பங்குகொண்ட குழுவும் என எமது பாடசாலையிலிருந்து கலந்து கொண்ட மாணவர்களே எதிர்வரும் 13ஆம் திகதி மகரகமவில் நடைபெறவுள்ள தேசியமட்ட போட்டியில் கலந்து கொள்வதற்காகத் தெரிவுசெய்யப்பட்டவர்களாவர்.
இளம் பாடகர் தெரிவில் வெற்றிபெற்ற செல்வி அமிர்தாவை தயார்ப்படுத்திவிட்ட இசை ஆசிரியைகளான திருமதி கலாசக்தி றொபேசன் திருமதி பங்கையற்செல்வி முகுந்தன் சாஸ்திரிய நடன வெற்றியாளர் செல்வி கவிதாவையும் கிராமிய நடனத்தில் வெற்றிபெற்ற குழுவையும் தயார்ப்;படுத்திவிட்ட நடன ஆசிரியைகளான திருமதி தே.சந்திரதாசன் திருமதி அகிலவாணி இராஜ்குமார் சித்திரத்தில் வெற்றிபெற்ற செல்வன் சசிதரனை தயார்ப்;படுத்திவிட்ட சித்திர ஆசிரியர் திரு.இ.ஜீவராஜ் அறிவிப்பில் வெற்றிபெற்ற செல்வன் வினோதனை தயார்ப்படுத்திவிட்ட தமிழ் ஆசிரியர் திரு.இ.ராஜகோபால் ஆகியோர் வழங்கிய தீவிர பயிற்சிகளும் அதிபர் திருமதி வாசுகி தவபாலனின் நேரிய வழிநடத்துதலும் மாணவர்களின் சாதனைக்கு வழிகோலியிருந்தன என்ற வகையில் அவர்களையும் வெற்றிபெற்ற மாணவர்களையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை பாராட்டுவதுடன் நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டிகளிலும் வெற்றிபெற்று பாடசாலைக்கு பெருமைசேர்க்வேண்டும் என வாழ்த்துகின்றது.
இதேவேளை போட்டியாளர்களும் பக்கவாத்தியக் கலைஞர்களும் ஆசிரியர்களும் தேசியப் போட்டியில் கலந்துகொள்ள மகரகமவிற்கு சென்று வருவதற்கான செலவினை பொறுப்பேற்று உதவுமாறு தாய்ச் சங்கம் வேண்டிக்கொண்டதற்கிணங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை 75000.00 ரூபாவினை (எழுபத்தையாயிரம); அனுப்பிவைத்து ஊக்கிவித்துள்ளது.
No Responses to “கலாசாரப் போட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவாகி சாதனை”