எதிர்வரம் 3ஆம்திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு ஸ்காபுரோ நகர மண்டபத்தில் (Scarborough Civic Centre, Committee Room # 1) நடைபெறவுள்ள பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொதுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதித்து ஏற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு அறிக்கையும் வரவு-செலவு அறிக்கைகளும் உறுப்பினர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ் அறிக்கைகளின் அச்சுப் பிரதிகள் தேவைப்படுவோர் அல்லது அறிக்கைகள் கிடைக்கத் தவறியோர் நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளுமாறு தயவாக வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் உறுப்பினர்கள் தவறாது கலந்துகொண்டு புதிய நிர்வாகத்தை தெரிவுசெய்வதுடன் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டு கல்லூரியின் மேம்பாட்டில் பங்கு கொள்ளுமாறு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை உறுப்பினர்கள் அனைவரையும் மீண்டும் அன்புரிமையுடன் அழைக்கின்றது.
தொடர்புகளிற்கு: 416 8040587 அல்லது 416 312 3061
மின்னஞ்சல் முகவரி: karaihinducanada@gmail.com
Scarborough Civic Centre. 150, Borough Dr. Scarborough.
No Responses to “ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பழைய மாணவர் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கைகள் உறுப்பினர்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.”