“கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம”; என்று கடந்த 32 ஆண்டு காலமாக அலுவலக ரீதியாக பயன்படுத்தி வந்த எமது கல்லூரியின் பெயரை நீக்கி “காரைநகர் இந்துக் கல்லூரி” என்ற பெயரை ஜனவரி 01.2016 முதல் பயன்படுத்த எழுத்து மூலமான அனுமதி தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கு அறியத்தந்துள்ளார்.
மூன்று தசாப்த காலமாக(1941-1970) எமது கல்லூரியில் சேவையாற்றி பின்னர் வட்டுக்கோட்டைத் தொகுதி நாடளுமன்ற உறுப்பினராகவும் இருந்த கலாநிதி. ஆ.தியாகராஜா அவர்கள் மரணத்திரைக்குள் மறைய அவரின் சேவையைக் கௌரவித்து அப்போதயை அரசாங்கம் 1983 இல் இக்கல்லூரிக்கு கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் எனப் பெயர் மாற்றம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No Responses to “காரைநகர் இந்துக் கல்லூரி’ என்ற பெயரைப் பயன்படுத்த அனுமதி”