வழுப்போடை, களபூமி, காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தவரும் எமது சங்கத்தின் முன்னாள் நிர்வாக சபை உறுப்பினரான திரு.இராஜரத்தினம் சத்தியசீலன், உறுப்பினரான திருமதி நிரஞ்சனா சிறீகாந் ஆகியோரது அன்பு மைத்துனரும் எமது கல்லூரியின் சிறந்த விளையாட்டு வீரரும், யாழ்.இந்துவின் ஓய்வுநிலை ஆசிரியரும், யாழ்ப்பாணத்தில் பிரபல்யம் பெற்ற ஆற்றல் மிக்க கணிதபாட ஆசிரியராகவிருந்து காரை.இந்துவிற்கு பெருமை சேர்த்தவருமாகிய திரு.சுப்பிரமணியம் இலட்சுமணன் அவர்கள் 01-08-2022 அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரது இழப்பினால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது சங்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”