பழைய மாணவர் சங்க கனடாக் கிளை காரை.இந்துவின் வளர்ச்சி நோக்கிய தனது இலட்சியப் பயணத்தில் 10வது ஆண்டு நிறைவு என்கின்ற முக்கியமான மைல் கல்லை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 1ஆம் திகதி வெற்றிகரமாக அடையவுள்ள செய்தியை சங்கத்தின் நிர்வாகம் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் பேருவகையடைகின்றது.
10வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தினை ரொறன்ரோவின் பிரபல கலைஞர்கள் பங்கேற்கும் இசை, நடனம், நாடகம் ஆகிய கலை நிகழ்வுகளை உள்ளடக்கிய பெரும் கலை விழாவாக அமைப்பதுடன் கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் இக்கலை விழா வெகு விமர்சையாக முன்னெடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் அக்டோபர் மாதம் 1ஆம் திகதி சனிக்கிழமை கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள இக்கலை விழாவினை சிறப்பாக அமைக்கும் பொருட்டு சங்கத்தின் தலைவர் திரு.மு.வேலாயுதபிள்ளை அவர்களின் தலைமையில் விழா அமைப்புக் குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டு விழா ஏற்பாடுகள் அனைத்தும் இக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முழுமையான நிகழ்ச்சிகளுடனான விழா விளம்பரம் வெகு விரைவில் வெளியிடப்படவுள்ளதுடன் இவ்விழாவின் வெற்றிக்கு அனுசரணை வழங்கியும் நுழைவுச் சீட்டுக்களைப் பெற்றும் ஆதரவளிப்பதன் மூலம் தங்கள் அனைவரதும் சீரிய வாழ்விற்கு வழியாட்டிய கல்லூரி அன்னையின் செழிப்பில் பங்கேற்குமாறு காரை.இந்து அன்னையின் புதல்வர்களையும் நலன் விரும்பிகளையும் விழா அமைப்புக்குழு அன்பாக வேண்டிக்கொள்கின்றது.
பின்வரும் விழா அமைப்புக்குழு உறுப்பினர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை திட்டமிட்டமுறையில் முன்னெடுத்து விழாவின் வெற்றிக்கு உழைத்து வருகின்றனர்.
திருமதி பிரபா ரவிச்சந்திரன்
திரு.கனகரத்தினம் சிவபாதசுந்தரம்
திரு.சிற்றம்பலம் சச்சிதானந்தன்
திரு.நடராசா பிரகலாதீஸ்வரன்
திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன்
திருவேங்கடம் சந்திரசோதி
திருமதி அனுசூயா ஞானகாந்தன்
திரு.கனக சிவகுமாரன்.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 10வது ஆண்டு விழாவினை அக்டோபர் 1ஆம் திகதி வெகு விமர்சையாகக் கொண்டாடத் தீர்மானம்.”