காரைநகர் இந்துக்கல்லூரி 125வது ஆண்டில் பாதம் பதிக்கின்ற இவ்வேளையில் கல்லூரியின் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கின்ற அமைப்பாக பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையும் இணைந்து கொண்டிருக்கின்ற செய்தி பாடசாலைச் சமூகத்தினையும் தரணியெங்கம் பரந்து வாழும் காரை இந்து அன்னையின் புதல்வர்ளையும் பேருவகையும் பெருமையும் கொள்ள வைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
கனடா வாழ் பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் வழங்கிய வியத்தகு ஆதரவே இதற்கு வித்திட்டதெனலாம்.
ஓர் அமைப்பினுடைய அடிப்படையாகவும் அச்சாணியாகவும் விளங்கி பயனுள்ள வலுவான அமைப்பாக மாற்றி அமைக்கக்கூடியவர்கள் அதில் இணைந்து ஆதரவளிக்கின்ற அங்கத்தவர்களாகும்.
தங்களுடைய வளமான வாழ்விற்கு கல்வியையும் ஒழுக்கத்தினையும் ஊட்டிவளர்த்த கல்லூரி அன்னையின் மேம்பாட்டில் பங்குகொள்ளவேண்டும் என்கின்ற ஆவலில் நூற்றி ஐம்பது பழைய மாணவர்கள் அங்கத்துவம் பெற விண்ணப்பித்திருப்பது பெருமகிழ்வும் உற்சாகமும் தருவதாக அமைந்துள்ளது. ஏனைய அனைத்து பழைய மாணவர்களையும் அங்கத்தவர்களாக இணைந்து நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள பணிகளிற்கு ஆதரவளிக்குமாறு நிர்வாகம் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றது.
அங்கத்தவர்கள் இணைவு தொடர்பாக நிர்வாக சபை உறுப்பினர்கள் எவருடனாவதோ அன்றி பின்வருவோருடனோ தொடர்புகொண்டு விண்ணப்ப படிவங்களையும் விபரங்களையும் பெற்றுக்கொள்ளமுடியும்.
சி;தம்பிராசா – தலைவர் – (416)438-6735
கனக.சிவகுமாரன் – செயலாளர் – (647)766-2522
ஆ.சோதிநாதன் – பொருளாளர் – (647)838-9323
ந.பிரகலாதீஸ்வரன் – உப பொருளாளர் – (647)885-1723
No Responses to “கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தின் (காரைநகர் இந்துக் கல்லூரியின்) கனடா வாழ் பழைய மாணவர்களிற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை விடுக்கும் அன்பான வேண்டுகோள்”