காரைநகர் இந்துக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் முன்னோடி நிகழ்வாக வீதியோட்டம் மற்றும் பெண்களுக்கான சைக்கிளோட்ட போட்டிகள் நேற்று வியாழக்கிழமை(14.01.2016) அன்று காலை இடம்பெற்றது.
வீதியோட்டப் போட்டியை கல்லூரி முன்றலில் இருந்து கல்லூரியின் பதில் அதிபர் திருமதி கலாநிதி சிவநேசன் தொடக்கி வைத்தார். போட்டி காரைநகர் பிரதான சுற்றுவீதியினூடாக நடைபெற்றது.
இப்போட்டிக்கு நடுவர்களாக கல்லூரியின் முன்னாள் உப-அதிபர் திரு.ந.விஜயகுமார் அவர்களும், அயல் பாடசாலையான வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை அதிபர் செல்வி.விமலா விசுவநாதனும் கடமையாற்றினார்கள்.
வீதியோட்டப் போட்டியில் முதல் ஜந்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் விபரம் வருமாறு.
1ம் இடம் சி.கோகுலன் (தரம் 13,தியாகராசா இல்லம்)
2ம் இடம் ச.சதீஸ்குமார் (தரம் 10,பாரதி இல்லம்)
3ம் இடம் ச.சஜிந்தன் (தரம் 09,பாரதி இல்லம்)
4ம் இடம் சி.பிரகாஷ் (தரம் 12,சயம்பு இல்லம்,)
5ம்; இடம் ச.ஜோன் (தரம் 09 சயம்பு இல்லம்)
பெண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டி காரைநகர் துறைமுகம் சந்தியிலிருந்து தொடங்கியது. இப்போட்டிக்கு நடுவர்களாக கல்லூரியின் ஆசிரியர் திரு.சரவணபவானந்தசர்மா அவர்களும் பழைய மாணவர் சங்க பொருளாளர் திரு.சுந்தரலிங்கம் அகிலனும் கடமையாற்றினார்கள்.
பெண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டியில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவிகளின் விபரம் வருமாறு:
1ம் இடம் ஜோதிகா (நடராசா இல்லம்)
2ம் இடம் ந.யஸ்மினா (பாரதி இல்லம்)
3ம் இடம் செ.தேனுசா (பாரதி இல்லம்)
4ம் இடம் த.ரதிவதனா (தியாகராசா இல்லம்)
5ம் இடம் ருவணியா (நடராசா இல்லம்)
வீதியோட்ட நிகழ்வையும், வீதியோட்டப் போட்டியில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவர்கள் மற்றும் பெண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகள் பதில் அதிபர் திருமதி கலாநிதி சிவநேசன் விளையாட்டுபத்துறைப் பொறுப்பாசிரியர் திரு.அன்ரன் விமலதாஸ் ஆகியோருடன் நிற்பதனையும் படங்களில் காணலாம்.
No Responses to “கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வின் முன்னோடி நிகழ்வுகள்”