காரைநகர் இந்துக் கல்லூரியின் தெற்கு வளாகத்திலுள்ள மேல் மாடியுடனான சயம்பு ஞாபகார்த்தக் கட்டிடத்தின் கீழ்த் தளத்திலுள்ள தூண்கள்,Beam என்பவற்றில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டு ஆபத்தான நிலையிலுள்ளது.
இக்கட்டிடத்தின் மேல் தளத்தில் 04 வகுப்பறைகளும், கீழ்த் தளத்தில் நடனம், சங்கீதம், சித்திரம், நாடகம் ஆகியவற்றிற்கான வகுப்புக்களும் இயங்கி வந்தன. இக்கட்டிடத்தின் ஆபத்தான நிலை கருதி அதனைப் பயன்படுத்தவேண்டாம் என மாகாணக் கல்விப் பணிப்பாளர் அறிவுறித்தியதைத் தொடர்ந்து வகுப்பறைகளிற்கு பாரிய இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இங்கு நடைபெற்று வந்த அனைத்து வகுப்புக்களும் விஞ்ஞான ஆய்வுகூடம், பல்லூடக அறை, ஆசிரியர் ஓய்வு அறை, மகிந்தோதய ஆய்வுகூடம், பிரதான மண்டப விறாந்தைகள் என்பவற்றில் நடைபெற்று வருகின்றன.
இக்கட்டிடத்தின் நிலை தொடர்பில் கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் மாகாண, மத்திய கல்விப் பகுதியுடன் தொடர்புகொண்டு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார். இவரது நடவடிக்கைகளின் பயனாக இக்கட்டிடத்தினைப் புனரமைப்புச் செய்வதற்கு வடமாகாண சபையினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்றின் மூலம் அறியப்படுகிறது.
இக்கட்டிடமானது வெள்ளிவிழா அதிபர் அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் முயற்சியினால் நிர்மாணிக்கப்பட்டு 1959ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
No Responses to “பாரிய வெடிப்புக்களால் பாதிக்கப்பட்டிருந்த சயம்பு ஞாபகார்த்தக் கட்டிடம் அதிபர் ஜெகதீஸ்வரன் அவர்களின் தொடர் நடவடிக்கைகளால் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாக அறியப்படுகிறது”