காரைநகர் இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகிய பாடசாலைகளிலிருந்து க.பொத. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி 2021ஆம் ஆண்டு சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கின்ற நிகழ்வும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கும் எதிர்வரும் 11-09-2022 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30மணிக்கு காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது. “தியாகத் திறன் வேள்வி-22” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்நிகழ்வுகளிற்கான அனுசரணையினை சுவிஸ்-காரைஅபிவிருத்திச் சபை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வுகள் தொடர்பில் சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபையினால் வெளயிடப்பட்டுள்ள செய்தி, மற்றும் அழைப்பிதழ், நிகழ்ச்சிநிரல் என்பன கீழே இணைக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் கௌரவிப்பும், தொழில் வழிகாட்டலும்
சுவிஸ் காரை அபி விருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்புடன் வருடாவருடம் நடாத்தப்பட்டு வருகின்ற ‘தியாகத்திறன் வேள்வி’ மாணர்களுக்கான ஆளுமைத்திறன் போட்டிகளை நடாத்துவதற்கு எமது சபையுடன் இணைந்து கடந்த பல வருடங்களாக காரை அபிவிருத்திச்சபை நிர்வகத்தினர் மற்றும் காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மிகச் சிறப்பாக செயலாற்றிவருகின்றமை யாவரும் அறிந்தே இருப்பினும் கடந்த மூன்று வருடங்களாக உலகில் பரந்து இருந்த கொரோனா பெரும் தொற்றுக்காரணமாக மாணவர்களுக்கான போட்டிப்பரீட்சைகள் ஏதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காரைநகரின் இருபெரும் பாடசாலை அதிபர்களின் வேண்டுகோளிற்கிணங்க காரைநகர்ப் பாடசாலைகளில் பயிலும் மாணவர்களின் பலதரப்பட்ட திறன்களை ஊக்குவித்து மேம்படுத்தும் வகையில் ‘தியாகத்திறன் வேள்வி- 2022’ மாணவர்கள் கௌரவிப்பும், தொழில் வழிகாட்டலும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
கடந்த 2021ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சையில் தோற்றி சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களையும் மற்றும் தொழிற்கல்விக்கான சந்தர்பங்களை வழங்கும் திறந்த பல்கலைக்கழகம்இ தொழில்நுட்ப கல்லூரிகள் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் தமது தொழில் கல்வியை மேற்கொள்ளாது சாதாரணமான கூலி வேலைகள் போன்றவற்றிலும் பெண் பிள்ளைகள் எந்த வேலைகளுக்கும் செல்லாது வாழ்க்கையில் சிரமப்படுகின்றனர். இந் நிலையைப் போக்குவதற்கும் இந்த மாணர்களுக்கு உயர் தொழில் வழிகாட்டலை ஊக்குவிக்கும் முகமாக காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி அதிபர் தி. மதிவதனன் தலைமையில் மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை காரைநகர் இந்துக்கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளதால் காரைநகர் பாடசாலை சமூகத்தினர், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி
‘ஆளுயர்வே ஊருயர்வு’
‘நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்’
இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
செயற்குழு உறுப்பினர்கள்
மொழிஇ கல்விஇ கலை மேம்பாட்டுக்குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்
08.09.2022
No Responses to “சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபையின் அனுசரணையில் க.பொ.த.உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கும்.”