காரைநகர் இந்துக் கல்லூரியின் நல் ஆசிரியர்கள் வரிசையில் மட்டுமன்றி கல்லூரியை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்ற அதிபர்கள் வரிசையிலும் இடம்பெற்று விளங்கும் திரு. செல்லத்துரை பத்மநாதன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து பாடசாலைச் சமூகம் அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்துள்ளதாக கல்லூரியின் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்கள் வழங்கிய அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
உயிரியல் பாடத்தைக் கற்பித்து பல மாணவர்கள் மனதிலும் இடம்பெற்றுள்ள இவர் ஆறு ஆண்டுகள் அதிபராகப் பணியாற்றிய காலத்தில் பாடசாலையின் வளர்ச்சியை திட்டமிட்டு முன்னேற்றிய வகையில் செயற் திறனும் ஆளுமையும் மிக்க அதிபர் என்ற பெயரைப் பெற்றவர். கல்வித் தரத்தையும் பௌதிக வளங்களையும் உயர்த்த உழைத்ததுடன் மாணவர்கள் மத்தியில் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பின்பற்றவும் கல்லூரியின் பாரம்பரியத்தைப் பேணவும் அக்கறையுடன் செயலாற்றியவர். பாடசாலையில் உள்ள கலைமகள் கோயிலில் அழகிய வடிவில் அமைந்துள்ள தூபி முகப்பு இவரது காலப் பகுதியிலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பது நினைவு கூரத்தக்கதாகும்.
அன்னாரது இழப்பினால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் பாடசாலைச் சமூகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுவதாக திருமதி வாசுகி தவபாலனின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளது.
No Responses to “முன்னாள் அதிபர் அமரர் எஸ். பத்மநாதனின் மறைவிற்கு பாடசாலைச் சமூகம் அனுதாபம்”