அமரர் செல்லத்துரை பத்மநாதன் B.Sc. Dip.In.Ed.
காரைநகர் இந்துக் கல்லூரியில் மாணவர்களின் மனம் கவர்ந்த சிறந்த உயிரியல் ஆசிரியராகப் பணியாற்றியதுடன் நிர்வாகத்திறன் மிக்க அதிபராகவும் ஆறு ஆண்டுகள் பதவி வகித்து கல்லூரியின் கல்வித்தர மேம்பாட்டிற்கும் பௌதிக வள மேம்பாட்டிற்கும் அர்ப்பணிப்புடன் உழைத்த திரு.செல்லத்துரை பத்மநாதன் தமது 84வது வயதில் இறைபதம் அடைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை ஆழ்ந்த துயரடைந்துள்ளது.
அமரர் பத்மநாதனின் முயற்சியினால் பாரதி நூற்றாண்டு விழா கல்லூரியில் வெகு சிறப்பாக மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டதுடன் இவ்விழாவிற்கு தமிழக அறிஞர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர். இவரது காலத்திலேயே முறைசாராப் பிரிவின் கீழ் தையல, கைப்பணி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அமைந்துள்ள சரஸ்வதி ஆலயத்தின் தூபி முகப்பு நிர்மாணிக்கப்பட்டமை அமரர் பத்மநாதன் அவர்களின் முயற்சியின் விளைவே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அன்னாரின் பிரிவால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தினையும் ஆறுதலையும் தெரிவித்து அன்னாரது ஆத்மா சாந்தியடைய பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
பழைய மாணவர் சங்கம் – கனடா
பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலியைக் கீழே காணலாம்.
No Responses to “எமது கல்லூரியின் முன்னாள் அதிபர் அமரர்.S.பத்மநாதன் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் வணக்கம்”