காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு கடந்த சனிக்கிழமை(30.01.2016) அன்று பிற்பகல் 1:30 இற்கு பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் அவர்களின் தலைமையிலும் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு.அன்ரன் விமலதாஸ் அவர்களின் ஒருங்கமைப்பிலும் நடைபெற்றது. கற்கைநெறிக்கான விடுமுறையில் சென்றிருந்த அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களும் நிகழ்விற்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடக்க சிறப்பாகும்.
பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை விரிவுரையாளரும் யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தின் தலைவருமான திரு.M.இளம்பிறையன் அவர்களும் அவர்தம் பாரியார் மானிப்பாய் மகளிர் கல்லூரி ஆசிரியை திருமதி.S.இளம்பிறையன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக தீவக வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு.S.பாஸ்கரன் அவர்களும், காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆ.குமரேசமூர்த்தி அவர்களும் கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை ஆங்கிலத்துறை உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு.மு.கதிரேசம்பிள்ளை அவர்களும் கலந்து கொண்டனர்.
ஓய்வுநிலை ஆங்கிலத்துறை உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.சிவபாக்கியம் நடராஜா, யாழ்ற்றன் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் திரு.ந.பரமசிவம், களபூமி முத்தமிழ் பேரவை தலைவர் திருமதி.இராசமலர் நடராஜா, மற்றும் உள்ளுர் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பழையமாணவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
ஸ்ரீலங்கா கொடியை பிரதமவிருந்தினரும் கல்லூரிக் கொடியை கல்லூரியின் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசனும் ஏற்றி வைத்த பின்னர் ஒலிம்பிக் கொடி, இல்லங்களிற்கான கொடிகள், சிறப்பு குழுக்களிற்கான கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டு நிகழ்வுகள் தொடங்கின.
மாணவர்களின் பல்வேறு அணிகள் அணிநடையில் பங்குகொண்டிருந்தமை மைதானத்தில் மாணவர்களின் பங்குபற்றலை அதிகரித்திருந்தது. இடைவேளையின்போது மாணவர்களின் உடற்பயிற்சிக் கண்காட்சி(Gymnastics Show) பார்வையாளர்களை கவர்ந்திருந்தது. இல்லங்களுக்கிடையேயான மைதான தடகளப் போட்டிகளைத் தொடர்ந்து கயிறு இழுத்தல் போட்டிகள் நடைபெற்றன.
பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசனின் தலைமையுரையினைத் தொடர்ந்து அதிபர் திருமதி.வாசுகி தவபாலனும் உரைநிகழ்த்தினார். விருந்தினர்களின் உரையினைத் தொடர்ந்து பரிசில் வழங்கல் நிகழ்வு நடைபெற்றது.
கல்லூரியின் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு.அன்ரன் விமலதாஸ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி–2016”