பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நேச அமைப்பான சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை எமது பாடசாலையின் சயம்பு மண்டபத்திற்கு மேலதிக மின்விளக்குகள், மின் விசிறிகளை இணைக்கும் திட்டத்திற்கான நிதியுதவியை வழங்கி இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் சயம்பு மண்டபத்திற்கு மேலதிக மின்சார இணைப்புகள் செய்யப்பட வேண்டும் என்ற திட்டம் பாடசாலை நிர்வாகத்தினால் சுவிஸ் காரை அபிவிருத்தி சபையிடம் முன்வைக்கப்பட்டமையை அடுத்து இதற்கான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் சயம்பு மண்டபத்திற்கு ரூ 90,375.00 ரூபா செலவில் 13 மின்விளக்குகள், 7 மின் விசிறிகள் இவற்றிற்கான தனியான பிரதானஅழுத்தி என்பன இணைக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் காரை அபிவிருத்தி சபை அறியத்தந்துள்ளது.
சுவிஸ் காரை அபிவிருத்தி சபை வெளியிட்டுள்ள முழமையான செய்திக்குறிப்பைக் கீழே காணலாம்.
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் யா-காரைநகர் இந்துக்கல்லூரி சயம்பு மண்டபத்திற்கு மின்இனணப்பு வழங்கப்பட்டுள்ளது
அன்பான சுவிஸ் வாழ் காரைமக்களே!
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் பதினொராவது ஆண்டுவிழா காரைத்தென்றல்-2015 சுவிஸ் வாழ் காரை மக்களின் உன்னதமான நாற்பத்தாறு குடும்ப அங்கத்தவரின் நிதிப்பங்களிப்பினால் வெகு சிறப்பாக நடைபெற்றது யாவரும் அறிந்ததே!
காரைத்தென்றல்-2015 ஆண்டுவிழாவின் செலவுகள் தவிர்த்து மிகுதிப்பணம் எதற்கு பயன்பட்டது என்பதை அகமகிழ்வுடன் தெரியப்படுத்துகின்றோம்.
எமது கிராமத்தின் எதிர்கால அறிஞர்களை உருவாக்கும் நோக்குடனும் புலத்திலும் தாயகத்திலும் கல்வி பயிலும் மாணவ,மாணவிகளை ஒன்றிணைக்கும் வண்ணமும் காரைநகரைப் பிறப்பிடமாகவோ, பூர்விகமாகவோ கொண்ட மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி (26.09.2015) பிற்பகல் 3.00 மணி யிலிருந்து பிற்பகல்பகல் 5.00மணி வரை காரைநகர் காலநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய சயம்பு ஞாபகார்த்த மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இப் பரீட்சை நடாத்தும் பொழுது மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பாக அவர்களின் கற்றல் செயல்பாட்டை மேம்படுத்த மண்டபத்திற்கான மின்சாரக் குறைபாட்டினை நிவர்த்தி செய்துதரும்படி காரை அபிவிருத்திச்சபை தலைவர் திரு.ப.விக்கினேஸ்வரன் ஊடாக பாடசாலை அதிபர் திருமதி வாசுகி தனபாலன் அவர்களால் எமது சபையிடம் முன்வைக்கப்பட்டது. இதனை சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் செயற்குழு உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்து மண்டபத்திற்கு பதின்மூன்று மின்விளக்குகள், ஏழு மின் விசிறிகள் இவற்க்கான தனியான பிரதானஅழுத்தி என்பன 90375.00ரூபா.செலவில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
எமது சபையின் நாட்காட்டி 2016 காரைநகர் ஆயிலி சிவஞானோதய வித்தியாலயத்தில் 24.12.2015 வியாழக்கிழமை அன்று 1000 பிரதிகள் அச்சிடப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது. ஐரோப்பிய நேரப்படி கணிக்கப்பட்ட நாட்காட்டி 150 பிரதிகளில் 50பிரதிகள் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்திடம் கையளிகப்பட்டது. மிகுதி 100 பிரதிகள் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் 10.01.2015 ஞாயிற்றுக்கிழமை ளுவ. துழளநக Pகயசசயஅவ சுöவெபநளெவசயளளந 80இ 8005 ணுüசiஉh. மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. நாட்காட்டி அச்சுப்பிரதிக்கான செலவு 133750.00 ரூபாய்கள் என்பதனையும் காரைநகரில் வெளியிடப்பட்ட நாட்காட்டியின் வருமானங்கள் அனைத்தும் காரை அபிவிருத்திச் சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியத்தருகின்றோம்.
அன்பான சுவிஸ் வாழ் காரைமக்களே! உங்களின் உன்னதமான பங்களிப்பின் ஊடாகத்தான் எமது சபையால் பல நற்காரியங்களை செய்ய முடிகின்றது. தொடர்ந்தும் உங்கள் உதவியை சபை நாடி நிற்கின்றது. 2015ஆம் ஆண்டு கட்டுரைப்போட்டி அ,ஆ,இ பிரிவுகளில் தெரிவான 31மாணவர்களின் கட்டுரைகள் வாரம் ஒன்றும், சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் 2004 இல் இருந்து 2015 வரை பணிகளும் சேவைகளும் இணையத்தில் பிரசுரிக்கப்படும். என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துகின்றோம்.
நன்றி
“நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்”
இங்ஙனம்,
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
செயற்குழு உறுப்பினர்கள்,
சுவிஸ் வாழ் காரை மக்கள். 01.02.2016
No Responses to “சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை சயம்பு மண்டபத்திற்கு மேலதிக மின்சார இணைப்புகள் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றியுள்ளது”