பழைய மாணவர் சங்கத்தின் நேச அமைப்பான கனடா-காரை கலாசார மன்றத்தின் பொதுக் கூட்டம் அதன் உப-தலைவரான திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன் தலைமையில் ஸ்காபுரோ நகரசபை மண்டபத்தில் இன்று முற்பகல் 10.00மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதிய நிர்வாக சபை தெரிவு முக்கிய நிகழ்வாக இடம்பெற்றிருந்தது.
சங்கத்தின் புதிய தலைவராக திரு.சிவசம்பு சிவநாதன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கனடாவில் கணக்காளராகப் (CPA, CGA) பணியாற்றி வருகின்ற திரு.சிவநாதன் அவர்கள் கனடாவிலுள்ள பல சேவை அமைப்புக்களில் தொண்டு அடிப்படையில் பணியாற்றி வருபவர். சிறப்பாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பொருளாளராக நீண்டகாலம் பணியாற்றி வட-கிழக்கு மக்களின் புனர்வாழ்வில் இவரின் பங்களிப்பு அளப்பரியதாகும். தற்போது வட-கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவி வருகின்ற மண்வாசனை (Canadian Relief and Development Organization) அமைப்பிலும் கனடா தமிழ்க் கல்லூரியிலும் (Canadian Tamil Academy ) தொண்டாற்றி மக்களிற்கான சேவையை வழங்கி வருபவர். அனுபவமும் ஆற்றலும மிக்க திரு.சிவநாதன் அவர்கள் கனடா-காரை கலாசார மன்றத்தின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறித்து அவரையும் அவரது தலைமையில் அமைந்துள்ள நிர்வாகத்தையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துவதுடன் அவரது பதவிக்காலத்தில் இரு சங்கங்களுக்குமிடையேயான நேச உறவு வலுப்பெற்று விளங்கும் என உறுதியாக நம்புகிறது.
நிர்வாக சபை உறுப்பினர்களும் திட்டமிடல் போசகர் சபை உறுப்பினர்களும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “சிவசம்பு சிவநாதன் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள கனடா-காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாக சபையை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துகின்றது.”