பழைய மாணவர் சங்க கனடா கிளையின் உறுப்பினர்களுக்கு சங்க நிர்வாகம் விடுக்கும் பணிவான வேண்டுகோள்
கலாநிதி ஆ.தியாகராசா ம.ம. வித்தியாலயம் – காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டம் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 23 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையான ஓராண்டு காலப் பகுதியில் சங்கத்தின் அனுசரணையுடன் பாடசாலையின் வளர்ச்சி சார்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்த பணிகள் தொடர்பிலான விரிவான செயற்பாட்டு அறிக்கை மற்றும் வரவு-செலவு அறிக்கை என்பன உறுப்பினர்கள் அனைவருக்கும் வழமைபோல தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படவுள்ளன என்பதுடன் புதிய நிர்வாக சபைத் தேர்தலிற்கான விண்ணப்பங்களும் கோரப்படவுள்ளன.
2016ஆம் ஆண்டுக்கான உறுப்புரிமை சந்தாவும் செலுத்தத் தவறிய 2015ஆம் ஆண்டுக்கான சந்தாவும் தற்போது பெற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றது. இது விடயத்தில் உறுப்பினர்களின் மேலான ஒத்துழைப்பினை சங்க நிர்வாகம் பணிவாக வேண்டி நிற்பதுடன் என்றும் போல அனைவரதும் ஊக்குவிப்பும் ஆதரவும் கிடைக்கும் என உறுதியாக நம்புகின்றது.
பின்வரும் வழிகளில் சந்தாவினை செலுத்திக்கொள்ளமுடியும்.
சங்கத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்ட பின்னர் தரப்பட்டுள்ள தொலைபேசி எண்களுள் ஒன்றினை அழைத்தோ அன்றி மின்னஞ்சல் வழியாகவோ அறியத்தரலாம்.
தங்களுக்கு அண்மையிலுள்ள சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினரிடமும் மொன்றியல், ஒட்டாவா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய பிரதேசங்களிலுள்ள உறுப்பினர்கள் அப்பகுதிக்குரிய இணைப்பாளரிடமும் கையளிக்கலாம்.
வங்கிக் கணக்கு விபரம்:
TD Bank Account Number: 5238995
Transit Number: 00329
தொடர்புகளுக்கு:
(416)267-6999 அல்லது (647)766-2522
மின்னஞ்சல் முகவரி: karaihinducanada@gmail.com
மு.வேலாயுதபிள்ளை கனக சிவகுமாரன் மா.கனகசபாபதி
தலைவர் செயலாளர் பொருளாளர்
No Responses to “பழைய மாணவர் சங்க கனடா கிளை விடுக்கும் வேண்டுகோள்”