அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் நடத்தப்பட்ட தேசிய உற்பத்தித் திறன் -2014 ஆண்டுக்கான தேசிய ரீதியிலான போட்டியில் பங்குபற்றி சிறப்புத் தகமை விருதினை பெற்ற வடமாகாணத்தின் ஒரே ஒரு பாடசாலையாக எமது கல்லூரி விளங்குகின்றது.
இச்சான்றிதழைப் பெற்றதன் மூலம் வடமாகாணத்தில் வெற்றிபெற்ற ஒரே பாடசாலை என்ற பெருமையைப் பெற்று விளங்குவதுடன் பல நகர்ப்புறப் பாடசாலைகளையும் பின்தள்ளி இவ்வெற்றியைப் பெற்றமை குறித்து கல்லூரி அதிபர் தமது மகிழ்ச்சியினை தெரிவித்தார்.
கல்விச் செயற்பாடுகள, இணைப்பாடவிதானச் செயற்பாடுகள, கற்றலை மேற்கொள்வதற்கான சூழல், பாதுகாப்பான சூழல, சமூகத்திற்கும் பாடசாலைக்குமிடையேயான உறவு, பாடசாலைச் சுவர்களில் அறிவு சார்ந்த வாக்கியங்கள் எழுதப்பட்டிருந்தமை, பாடசாலைத் தோட்டம் உள்ளிட்ட பசுமைப் புரட்சி, சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களிற்கும் புள்ளிகள் வழங்கப்பட்டு வெற்றிபெற்ற பாடசாலைகள் தீர்மானிக்கப்பட்டிருந்தன.
இவ்வெற்றியைப் பெறுவதற்கு மூலகாரணமாக விளங்கி சிறப்பான முறையில் பாடசாலையை நிர்வகித்து வருகின்ற அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்களையும் அவருடன் இணைந்து பணியாற்றுகின்ற ஆசிரியர்களையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை பாராட்டி வாழ்த்துகின்றது.
அண்மையில் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் அதிபருடன் இணைந்து ஆசிரியை திருமதி தயாளினி ஜெயகுமார் அவர்களும் சிறப்புத் தகமைச் சான்றிதழை பெற்றக்கொண்டார்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் சிறப்புத் தகமைச் சான்றிதழ் பெற்று எமது கல்லூரி சாதனை”