பாடசாலையில் தேசிய மட்டத்தில் சாதனைப் பதிவுகளை ஏற்படுத்திய வெற்றியாளர்களைப் பாராட்டி மதிப்பளிக்கும் வகையில் நடைபெற்ற வெற்றியாளர் தினம் நேற்று புதன்கிழமை (23.04.2016) அன்று யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாரும் பழைய மாணவியுமாகிய கலாநிதி.திருமதி.வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம் அவர்களின் தலைமையில் கல்லூரியின் நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பிரதம விருந்தினராக வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சர் த.குருகுலராசாவும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார்,தேசிய கல்வி நிறுவகப் பிரதிப் பணிப்பாளர் நாயகம் றஞ்சித் சந்திரசேகர,தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் சு.சுந்தரசிவம் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் தேசிய,மாகாண மட்டங்களில் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவர்களும் அவர்களை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களும் விருந்தினர்களால் பதக்கம் அணிவிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
பழைய மாணவர்களான கலாநிதி திருமதி.வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம் அவர்களும், தொழிலதிபர் திரு.பரமநாதர் தவராசா (லண்டன்) அவர்களும் விழாவிற்கு நிதி அநுசரணை வழங்கி உதவியிருந்தனர்.
விழாவில் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பினைக் கீழே காணலாம
No Responses to “சிறப்பாக நடைபெற்ற வெற்றியாளர்கள் தின விழா(Winners Day)”