பழைய மாணவர் சங்க கனடா கிளையின் உப-தலைவர் திருமதி அனுசூயா ஞானகாந்தன் அவர்களின் சிறிய தந்தையும் பாடசாலையின் பழைய மாணவருமாகிய திரு. சபாபதிப்பிள்ளை சபநேசன் அவர்கள் 12-04-2016 வெள்ளிக்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சபாபதிப்பிள்ளை சபாநேசன்
பிறப்பு : 18 ஒக்ரோபர் 1941 இறப்பு : 12 ஏப்ரல் 2016
யாழ். காரைநகர் புதுவீதியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் மாப்பாணவூரியை வதிவிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை சபாநேசன் அவர்கள் 12-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, சிவபாக்கியம்(காரைநகர் புதுவீதி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், நேசம்மா(காரைநகர் மாப்பாணவூரி) தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவரூபன்(சவுதி அரேபியா), சீவரத்தினம்(இலங்கை), சிவாஜினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சபாநடேசன்(கனடா), சபாநாதன்(பிரித்தானியா), சுசீலாவதி(இலங்கை), சபாநாயகம்(பிரித்தானியா), காலஞ்சென்ற Dr.சபாரட்ணம், சிவஞானவதி(இலங்கை), சபேந்திரன்(பிரித்தானியா), சங்கரப்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனுஜா(சவுதி அரேபியா), கௌரி(இலங்கை), தயாளன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனலக்ஷ்மி, சரஸ்வதி, விநாயகமூர்த்தி, விமலாதேவி, மங்கையர்கரசி, காலஞ்சென்ற துரைச்சாமி, யசோதரா, காலஞ்சென்ற சிவமலர், அனுலா, புஹனேஸ்வரி, தேவராஜா, காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, தவராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிறோஷன், கஜாணனன், ரவிஷணனன், திவ்யன், ஜஸ்மின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தொலைபேசி: 94212211454
செல்லிடப்பேசி: 94714522166
No Responses to “மரண அறிவித்தல் திரு சபாபதிப்பிள்ளை சபாநேசன்”