பெரியமணல், வலந்தலை, காரைநகரை பிறப்பிடமாகவும் சந்திரந்தை, களபூமி, காரைநகரை வதிவிடமாகவும் கொண்டிருந்து வெளிக்குளம், வவுனியாவில் வசித்து வந்தவரும் எமது சங்கத்தின் வளர்ச்சியில் பல்லாற்றாலும் பங்காற்றி வருகின்ற எமது சங்க உறுப்பினரும் பிரபல வானொலி, அரங்க அறிவிப்பாளருமாகிய திரு.ஞானபண்டிதன் அவர்களின் அன்புத் தந்தையான திரு.கைலாசபிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 14-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரது இழப்பினால் ஆறாத்துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது சங்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”