.காரை.இந்துவின் அடிப்படைத் தேவைகளிற்கு தேவைப்படும் நிதியினை பெற்றுக்கொள்ளும் வகையில் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினால் இரண்டு மில்லியன் ரூபா உதவப்பட்டு நிரந்தர வைப்புத் திட்டம் 2020ஆம் ஆண்டு தொடக்கி வைக்கப்பட்டிருந்தது. பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 10வது ஆண்டு விழாவின் மூலம் சேகரிக்கப்பட்டிருந்த இரண்டரை மில்லியன் ரூபாவினை உதவியதன் ஊடாக நிரந்தர வைப்புத்திட்டத்தின் தொகை நான்கரை மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் காரை.இந்துவிற்கு விஜயம் செய்திருந்த பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளரான திருமதி பிரபா ரவிச்சந்திரன் சங்கத்தினால் உதவப்பட்டிருந்த இரண்டரை மில்லியன் ரூபாவிற்கான தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிட்ட சான்றிதழை கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களிடம் சம்பிரதாயபூர்வமாகக் கையளித்திருந்தார். இக்கையளிப்பு நிகழ்வில் மாகாண மட்டத்தில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அனுசரணையில் ஊக்குவிப்புப் பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தன. இப்பரிசல்களை திருமதி பிரபா ரவிச்சந்திரன் வழங்கி மாணவர்களை கௌரவித்திருந்தார்.
மேற்படி நிகழ்வின் போது கல்லூரியின் முன்னாள் ஓய்வு நிலை அதிபர் பண்டிதர் திரு மு.சு. வேலாயுதபிள்ளை அவர்களும், பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும், அபிவிருத்திச் சபையின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
கல்லூரியின் அதிபர் அவர்கள் தனது தலைமை உரையில் இன்று விருந்தினராக வந்து கலந்துகொண்டிருக்கும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளரான திருமதி பிரபா ரவிச்சந்திரன் அவர்கள் கனடா பழைய மாணவர் சங்கம் உயிர்த்துடிப்புடன் இயங்க செயற்படும் ஒருவர் எனக் குறிப்பிட்டு அவர்களின் அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டி நன்றி தெரிவித்திருந்தார்.
பண்டிதர் மு.சு வேலாயுதபிள்ளை அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் கடந்த காலங்களில் பாடசாலை நிகழ்வுகளை நடாத்துவதற்கு பலத்த நிதி நெருக்கடிகளை தான் எதிர்கொண்டதாகவும் கனடா பழைய மாணவர் சங்கம் தோற்றுவிக்கப்பட்ட பின்னர் இக்குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு, புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் காரை இந்துவின் புதல்வர்களின் பாடசாலைப் பற்றையும், ஊர்ப்பற்றையும் வெகுவாகப் ;பாராட்டி உரையாற்றினார்.
பிரதி அதிபர் திருமதி அரூபா ரமேஸ் அவர்களின் நன்றி உரையுடன் இந்நிகழ்வு நிறைவடைந்தது.
ஊக்குவிப்புப் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்ட மாணவர்கள்
அகில இலங்கை பரத நடனப்போட்டி – 2022
சிரேஷ்ட பிரிவு – தனிநடனம்
செல்வன் சுரேஷ் டினுசன் வலய மட்டம் 1ஆம் இடம், மாகாண மட்டம் 2ஆம் இடம்
அணிசேர் கலைஞர்கள் – செல்வன் ஆனந்தராசா அரிகரன்
செல்வி அனிற்றா பற்குணராசா
அகில இலங்கை சங்கீத நடனப்போட்டி – 2022
சிரேஷ்ட பிரிவு – தனி நடனம்
செல்வி சரண்யா nஐயமோகன் வலயமட்டம் 1ஆம் இடம், மாகாணம் 2ஆம் இடம்
பக்க வாத்தியம் – செல்வன் அரிகரன் ஆனந்தராசா
குறுநாடக ஆக்கம் – திறந்த போட்டி
செல்வி சுகந்தினி கந்தேஸ்வரன் வலய மட்டம் – 1ஆம் இடம், மாகாண மட்டம் 2 ஆம் இடம்
தாய் – தாய்மொழி – தாய் நாடு என்ற தொனிப் பொருளில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி
மாகாண தெரிவுத் தேசிய சான்றிதழ் பெற்றமை
1. செல்வி வைஷ்ணவி குமாரசேகரன்
தேசிய கலை இலக்கியப் போட்டி முடிவுகள் – 2022
1. கவிதைப்பாடல் – செல்வன் ஆனந்தராசா அரிகரன் பிரதேச மட்;டம் 3ஆம் இடம், மாவட்ட மட்டம் – 3 இடம்
2. கவிதை – செல்வி வி. அபிராமி
பிரதேச மட்டம் – 1, மாவட்ட மட்டம்; – 2ஆம் இடம்
சைவபரிபாலன சபை போட்டி முடிவுகள் – 2022
திருக்குறள் போட்டி – சிரேஷ்ட பிரிவு
1. செல்வி தவலோசனா சாம்பசிவம் மாவட்ட மட்டம்; – 2ஆம் இடம்
இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில கீழே இணைக்கப்பட்டுள்ளன:
இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 10வது ஆண்டு விழா மூலம் சேகரிக்கப்பட்ட இரண்டரை மில்லியன் ரூபா பொருளாளர் திருமதி பிரபா ரவிச்சந்திரனால் அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.”