யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கணினி விஞ்ஞானத்துறையின் பேராசிரியர்களாகப் பதவி உயர்வினைப் பெற்ற இரண்டு சிரேஸ்ட விரிவுரையாளர்களுள் காரை.இந்து அன்னையின் மகிமைசால் புதல்வன் கலாநிதி அமிர்தலிங்கம் றமணன் அவர்களும் ஒருவராக இருப்பது குறித்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பேருவகையும் பெருமிதமும் அடைகின்றது. கலாநிதி றமணன் அமிர்தலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணினி விஞ்ஞானத்துறையின் தலைவராக முன்னர் பணியாற்றியிருந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானத்துறை நிறுவப்பட்ட முப்பது ஆண்டுகளின் பின்னர் தற்பொழுதுதான் முதன்முதலாக இருவர் இத்துறையில் பேராசிரியர்களாகப் பதவி உயர்வினைப் பெற்றுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
மாப்பாணவூரி, காரைநகரைச் சேர்ந்ந கலாநிதி றமணன் அவர்களின் தந்தையார் அமிர்தலிங்கம் அவர்களும் தாயார் ரஞ்சினி (கிளி) அவர்களும் காரை.இந்துவின் பழைய மாணவர்கள் என்பதுடன கலாநிதி றமணன் அவர்களின் துணைவியாரான திருமதி சிவரஞ்சனி அவர்கள் காரை.இந்துவின் பழைய மாணவியும் முன்னாள் ஆசிரியையும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பேராசிரியராகப் பதவி உயர்வினைப் பெற்று தான் கற்ற காரை.இந்துவைப் பெருமைப்படுத்திய கலாநிதி றமணன் அவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துவதுடன் அவர் இத்துறையில் கொண்டுள்ள அறிவும் ஆற்றலும் மேலும் உன்னதமான நிலையினைப் பெற்று கல்வி உலகில் புகழ்பெற்று விளங்குவார் என்கின்ற நம்பிக்கையினையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.
No Responses to “யாழ்.பல்கலைக்கழக கணினி விஞ்ஞானத்துறைப் பேராசிரியராகப் பதவி உயர்வினைப் பெற்ற காரை.இந்துவின் புதல்வன் கலாநிதி ரமணன் அவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகிறது.”