காரைநகர் இந்துக் கல்லூரியின் அதிபராக சென்ற இரு ஆண்டுகளாக கடமையாற்றிய திரு.பொன்.சிவானந்தராசா அவர்கள் வேலணை கோட்டக் கல்வி அதிகாரியாக பதவி உயர்வுபெற்றுச்சென்றதைத் தொடர்ந்து தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் Spe.Trd(Science) B.Sc.(Hons) Dip.;In Ed.(Distinction with Gold Medal Awarded) M.Ed.,M.Phil. ,SLPS 2 – 11 சென்ற 18-01-2013முதல் அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.இவர் கல்லூரியின் பழைய மாணவியும் காரைநகர் களபூமி பாலாவோடையை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். .சிறந்த நிர்வாகத்திறன் மிக்கவராக கருதப்படும் திருமதி வாசுகி தவபாலன் கல்லூரியை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்று அதன் புகழ் மேலோங்க உழைப்பார் என நம்பப்படுகிறது.
திருமதி வாசுகி தவபாலன் அவர்களிற்கு கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை பினவரும் வாழ்த்துச் செய்தியினை அனுப்பிவைத்துள்ளது.
காரை இந்து அன்னையின் அரவணைப்பில் வளர்ந்து கல்விப்பகுதியில் உயர் பதவி வகித்த தாங்கள் கல்லூரியின் அதிபராக பதவியேற்றுக்கொண்டமை குறித்து கனடா வாழ் பழைய மாணவர்கள் பேருவகை கொள்வதுடன் தமது நன்றியையும் பாராட்டினையும் வாழ்த்;தினையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.
காரைநகரின் கல்விப்பாரம்பரியத்திற்கு வித்திட்ட புகழ்பூத்த கல்லூரி தனது 125வது ஆண்டு நிறைவினை கொண்டாட கல்லூரிச்; சமூகம் ஆயத்தமாகும் இச்சந்தர்ப்பத்தில் தாங்கள் அதிபராக பதவியேற்றுக்கொண்டமை சிறப்பானது என்பதுடன் கல்லூரி அன்னை மீதான விசுவாசமும் பிறந்த காரை மண் மீதான பற்றும் நிர்வாகத் திறமையும் இணைந்து தங்களுடைய பதவிக்காலத்தில் கல்லாரி பல சாதனைப்பெறுபேறுகளை;ப்பெற்று மேன்மையுற்று விளங்கும் என உறுதியாக நம்பும் நாங்கள் தங்களால் முன்னெடுக்கப்படும் கல்லூரியின் மேம்பாட்டுப் பணிகளிற்கு எமது கிளை அமைப்பானது சாத்தியமான உதவிகளை வழங்க தயாராகவுள்ளது என்பதையும் அறியத்தருவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
No Responses to “இந்துவின் அதிபராக பதவியேற்றுள்ள திருமதி வாசுகி தவபாலன் அவர்களின் பதவிக்காலம் சாதனைப் பதிவுகளை ஏற்படுத்துவதாக அமையட்டும்! பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்து”