அண்மையில் வெளிவந்த க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் தீவக வலயத்தில் காரை.இந்துவைச் சேர்ந்த விதுசாலினி தபேந்திரன் என்ற மாணவியே ஒன்பது பாடங்களிலும் A தர சித்தியைப் பெற்றுக்கொண்டவராவாராக விளங்குகின்றார். காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து இப் பரீட்சைக்குத் தோற்றிய 58 மாணவர்களதும் பெறுபேறுகளின் பகுப்பாய்வு செய்யப்பட்ட விபரங்களின் அடிப்படையில் க.பொ.த. உயர்தரம் கற்பதற்கான தகமையினை 57.3 வீதமான மாணவர்கள் பெற்றுள்ளனர். இது சென்ற ஆண்டின் 43 வீதத்தைக்காட்டிலும் 14.3வீதம் அதிகமானதாகும். அதேவேளை கணிதபாடத்தில் சித்திபெறத் தவறிய மாணவர்களையும் சேர்த்துப் பார்க்கையில் உயர்தரம் கற்கத் தகமையுள்ளோர் 68.8 வீதமாகும். கணிதம் ஆங்கிலம் ஆகிய பாடங்களிலும்; இம்முறை சித்திவீதம் உயர்வடைந்து காணப்படுகிறது.
கல்லூரியின் கல்விநிலை உயர்வடைந்து வருவதில் கல்லூரியினது அதிபர் ஆசிரியர்கள் ஆகியோரது அர்ப்பணிப்பு மிக்க சேவை; பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை உள்ளிட்ட கொடையாளர்களின் உதவிகள் என்பன காரணங்களாக உள்ளன எனக் கூறலாம்.
கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பெறுபேறுகளின் பகுப்பாய்வு செய்யப்பட்ட விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
No Responses to “காரை.இந்துவின் கல்வித்தரம் உயர்வடைந்து வருவதை அண்மைய க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிப்படுத்துகின்றன”