காரைநகர் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் நான்காவது ஆண்டுப் பொதுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை (30.04.2016) அன்று நடைபெற்றது.
செயலாளர் திரு. கனக சிவகுமாரன் சென்ற பொதுக் கூட்ட அறிக்கையினையும், செயற்பாட்டு அறிக்கையினையும் சமர்ப்பித்து வாசித்திருந்தார். இவ்விரு அறிக்கைகளும் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
வரவு-செலவு அறிக்கையை உதவிப் பொருளாளர் திரு. நடராசா பிரகலாதீஸ்வரன் சமர்ப்பித்திருந்தார். இந்த வரவு செலவு அறிக்கையின் வடிவத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று சபை உறுப்பினர்கள் தெரிவித்த யோசனை சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் எதிர்வரும் காலங்களில் அவ்வடிவம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சபையில் தெரிவிக்கப்பட்ட பின்னர் இந்த அறிக்கை சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பொதுக்கூட்டத்திற்கு முன்னர் சங்கத்தின் வரவு-செலவு அறிக்கையும் செயற்பாட்டு அறிக்கையும் சங்க உறுப்பினர்களுக்கு ஏற்கனவே நிர்வாகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இவ்வறிக்கைகளை இங்கே அழுத்திப் பார்வையிடாலாம்.
No Responses to “பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் வரவு-செலவு அறிக்கையும் செயற்பாட்டு அறிக்கையும்”