கடந்த ஒக்ரோபர் 2015 இல் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர மாணவர்களுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்பப் (General Information Technology) பரீட்சைப் பெறுபேறுகள் கடந்த 28.04.2016 அன்று வெளியாகியிருந்தன.
இப்பரீட்சையில் எமது பாடசாலையில் A தரச் சித்தியை மூன்று மாணவர்களும், B தரச் சித்தியை 10 மாணவர்களும், C தரச் சித்தியை 12 மாணவர்களும், S தரச் சித்தி ஒரு மாணவரும் பெற்றுள்ளனர்.
எமது பாடசாலையிலிருந்து மேற்படி பரீட்சைக்குத் தோற்றிய க.பொ.த உ-தர வகுப்பில் பயின்ற 26 மாணவர்களும் இப்பரீட்சசையில் 100% சித்தியடைந்துள்ளமை மாத்திரமன்றி 96% வீதமான மாணவர்கள் திறமைச் சித்திக்கும் மேலான பெறுபேற்றைப் பெற்று தீவக வலயத்தில் சாதனை படைத்துள்ளனர்.
இப்பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும், இவர்களைக் கற்பித்த ஆசிரியையான திருமதி.சிவாஜினி லக்ஷ்மன் அவர்களுக்கும் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
No Responses to “க.பொ.த உ-த பொதுத் தகவல் தொழிநுட்பப்(GIT) பரீட்சையில் 96 சதவீத திறமைச் சித்தி பெற்று தீவக வலயத்தில் சாதனை”