கனடாவைச் சேர்ந்த வாய்ப்பாட்டு இசைக் கலைஞர் செல்வன் அமுதீசர் சச்சிதானந்தன் அவர்கள் வளர்ந்து வருகின்ற முன்னணிக் கலைஞராக விளங்குபவர். கனடாவிலும் தமிழகத்திலும் உள்ள பல இசை அரங்குகளில் பங்குகொண்டு இசை நிகழ்வுகளை வழங்கி ரசிகர்களதும் கலைஞர்களதும் பலத்த பாராட்டினைப் பெற்றுக்கொண்டவர். தமிழகத்தைச் சேர்ந்நத பல புகழ்பெற்ற பக்கவாத்தியக் கலைஞர்களுடன் இணைந்து இவர் இசைக் கச்சேரிகளை நிகழ்த்திய பெருமைக்குரியவர். அதுமட்டுமல்லாது மிருதங்கம் வாசிப்பதிலும் அமுதீசர் மிகுந்த ஆற்றல் மிக்க கலைஞராக விளங்குபவர்.
திரு.திருமதி சச்சிதானந்தன் (முதலிகேணியடி) சுந்தரேஸ்வரி (சிவன்கோயிலடி) தம்பதிகளின் மூத்த புதல்வனான இவரது இசைக் கச்சேரி காரைநகர் மணிவாசகர் விழாவின் இறுதி நாளான 5-01-2023 இரவு 8.30 மணிக்கு ஈழத்துச் சிதம்பர தேவஸ்தான வசந்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஈழத்தின் புகழ்பூத்த கலைஞர்களான வயலின் வித்துவான் திபாகரன் சண்முகநாதன் வயலினும் தவில் வித்துவான் N.R.S.சுதாகரன் தவிலும் வாசித்து பக்க இசை வழங்கி அமுதீசரின் இசைநிகழ்வினை மெருகூட்டிச் சிறப்பிக்கவுள்ளனர்.
செல்வன் அமுதீசரது தாய் தந்தையர் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பணிகளில் மிகுந்த ஈடுபாடுகொண்டு செயலாற்றி வருபவர்கள். குறிப்பாக தாயாரான சுந்தரேஸ்வரி அவர்கள் சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினராகவிருந்து அக்கறையுடன் பணியாற்றி வருவதன் ஊடாக அமுதீசரும் சங்கத்தின் பணிகளில் கரிசனைகொண்டு விளங்குபவர். பழைய மாணவர் சங்கத்தினால் நடாத்தப்பட்டிருந்த இசை நிகழ்வொன்றிற்கு இவர் மிருதங்கம் வாசித்து சிறப்பித்திருந்தமை இத்தருணத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.
இசைநிகழ்வு குறித்த அறிவித்தல் பிரசுத்தினை கீழே பார்வையிடலாம்:
No Responses to “மணிவாசகர் விழாவில் கனேடிய முன்னணி இளம் இசைக் கலைஞர் அமுதீசர் சச்சிதானந்தன் அவர்களின் இசைக் கச்சேரி.”