தலைவர, செயலாளர, பொருளாளர், நிர்வாகக் குழு உறுப்பினர்கள்
சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபை
அனைவருக்கும் வணக்கம்.
காரைத் தென்றல்-2016 பொலிவு பெற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துகின்றது
15-05-2016 ல் தங்களது அமைப்பின் ஆதரவில் நடைபெறவுள்ள காரைத் தென்றல் நிகழ்வில் தங்களது நட்பான அழைப்பினை ஏற்று எமது சங்கம் தவிர்க்கமுடியாத காரணங்களினால் கலந்துகொள்ளமுடியாமைக்கு வருந்துகின்றோம். அடுத்து வரும் ஆண்டுகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என்றே நம்புகின்றோம். எமது இரு சங்கங்களுககுமிடையே பேணப்பட்டு வருகின்ற நல்லுறவும் நல்லெண்ண வெளிப்பாடுகளும் மண்ணையும் மண்ணின் முதன்மைப் பாடசாலையையும் வளம்பெற வைக்க வழிவகுக்கும் என்பது எமது அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.
சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபை காரை மண்ணின் சிந்தனையுடன் பாரட்டும்படியாக ஆற்றி வருகின்ற மகத்தான பணிகள் வரிசையில் “காரைத் தென்றல-2016;” கலை விழா 12வது ஆண்டாக நடைபெறுகின்றது என்பதனை அறிந்து எமது சங்கம் பேருவகை அடைகின்றது.
காரைநகர் மக்களின் கலைத்துறை ஈடுபாடும் அதில் அவர்கள் ஏற்படுத்தி வருகின்ற சாதனைப் பதிவுகளும் காரை மக்களை பெருமைகொள்ளவைப்பதாகும். சுவிஸ் நாட்டிலள்ள எமது மண்ணின் எதிர்காலச் சந்ததி தமிழ்ப் பாரம்பரியக் கலையின் பெருமைகளை உணர்ந்து அதில் ஈடுபாடு கொள்ள ஊக்குவிக்கின்ற ஓரு விழாவாக மட்டுமல்லாது ஊரின் பெயரால் ஒன்று கூடி உறவுகொள்ள வைக்கவேண்டும் என்கின்ற கருத்தியல் மனத்தோடு உழைத்து வருகின்ற சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபையின் நிர்வாகக் குழுவைப் பாராட்டுகின்றோம்.
புலம் பெயர் தேசங்களிலுள்ள மண்ணின் சேவையாளர்களுடன் இடப்பெயர்வினால் சிதைவுற்றிருந்த காரைநகர் இந்துக் கல்லூரியை மீள ஆரம்பித்து அதனை கட்டியெழுப்பத் துணிச்சலோடு உழைத்த முன்னாள் அதிபர் திருமதி தேவநாயகி பாலசிங்கம் அவர்கள் இவ்விழாவிற்குப் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருப்பது விழாவினை உன்னதமைடைய வைத்துள்ளது.
தென்றல் காற்று வருடுகின்றபோது ஏற்படுகின்ற இனிமையான சுக அனுபவத்தைப் போன்ற அனுபவத்தினை காரைத்தென்றல் வழங்கும் வகையில் இவ்விழா பொலிவுபெற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துகின்றது.
த.அம்பிகைபாகன் கனக சிவகுமாரன் மா.கனகசபாபதி
தலைவர் செயலாளர் பொருளாளர்
No Responses to “காரைத் தென்றல்-2016 பொலிவு பெற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துகின்றது”