Clarivate இன் வருடாந்த உயர் மேற்கோள் பெற்ற ஆராய்ச்சியாளர்கள் 2022 பட்டியலில் இடம் பெற்றுள்ள, Communication Systems Research (CSR) குழுமத்தின் நிறுவனத் தலைவரும், EECS இன் கம்பியில்லாத் தகவல் தொடர்புகள் பேராசிரியருமான் ஆறுமுகம் நல்லநாதன் அவர்கள் மீண்டும் உலக அளவிலான சாதனை படைத்து காரை.இந்து அன்னையை பெருமைப்படுத்தியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் Clarivate உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க ஆராய்ச்சியாளர்களை அடையாளம் காண்கிறது. Clarivate கடந்த ஆண்டில் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட பல ஆவணங்களை வெளியிடுவதன் மூலம் அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை வெளிப்படுத்திய தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழுவாகும்.
கடந்த தசாப்தத்தில் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட பல்வேறு ஆவணங்களை வெளியிடுவதன் மூலம் தாம் தேர்ந்தெடுத்த துறை அல்லது துறைகளில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை வெளிப்படுத்திய, உலகெங்கிலும் உள்ள சுமார் 6,900 ஆராய்ச்சியாளர்களை இந்த வருடாந்த பட்டியல் அடையாளம் காண்கிறது. வலைத்தள விஞ்ஞான மேற்கோள் குறியீட்டில் உள்ள உயர் படி நிலை மற்றும் வெளியீட்டு ஆண்டிற்கான மேற்கோள்களின் மூலம் முதல் 1% தரவரிசையில் உள்ள வெளியீடுகளில் இருந்து அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் எடுக்கப்படுகின்றன. அத்துடன் இந்தப் பட்டியல் அந்த ஆராய்ச்சி நிறுவனங்களையும் அவை அமைந்துள்ள நாடுகளையும் அடையாளம் காண்கிறது.
2022ஆம் ஆண்டு பேராசிரியர் நல்லநாதன் அவர்கள் கணினி விஞ்ஞானத்தில் அவர் ஆற்றிய பணிக்காக அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட ஆராய்ச்சியாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இந்தத் துறையைச் சேர்ந்த 115 ஆராய்ச்சியாளர்களில் இவரும் ஒருவர். அத்துடன் இங்கிலாந்திலிருந்து பட்டியலிடப்பட்ட ஒன்பதே ஒன்பது ஆராய்ச்சியாளர்களில் இவரும் ஒருவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பேராசிரியர் நல்லநாதன் அவர்கள் இவ்விதம் அதிகம் மேற்கோள்காட்டப்பட்ட ஆராய்ச்சியாளராக 2016ஆம் ஆண்டிலும் அங்கீகரிக்கப்பட்டிருந்தமை இத்தருணத்தில் நினைவுகூரத்தக்கதாகும்.
London Queens Mary University இல் எனது தற்போதைய மற்றும் கடந்தகால PhD மாணவர்கள், ஆராய்ச்சி உடனுழைப்பாளர்கள், ஆராய்ச்சி ஒத்துழைப்பாளர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்த பேராசிரியர் நல்லநாதன் அவர்கள் அவர்களின் ஆதரவு இல்லாமல் இந்த மதிப்புமிக்க சர்வதேச அங்கீகாரத்தை என்னால் அடைந்திருக்க முடியாது எனவும் மேலும் தெரிவித்தார்.
புழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்களைப் பாராட்டி வாழ்த்துவதில் பேருவகையும் பெருமிதமும் அடைகின்றது.
2016ஆம் ஆண்டு பேராசிரியர் நல்லநாதன் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட சாதனை குறித்த செய்தியினை கீழுள்ள இணைப்பினை அழுத்திப் பார்வையிடலாம்:
https://www.karaihinducanada.com/?p=5507
No Responses to “காரை.இந்து அன்னையின் மகிமை மிக்க புதல்வன் பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்கள் மீண்டும் ஒரு முறை உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க ஆராய்ச்சியாளர்களில் ஒருவராகப் பெயரிடப்பட்டுள்ளார்”