அன்பார்ந்த காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா தலைவர், செயலாளர் மற்றும்நிர்வாக உறுப்பினர்களிற்கு,
அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா
காரைநகர் இந்துக் கல்லூரியின் செழிப்பு, காரை மக்களின் நலன் ஆகியவற்றை தமது பிரதானஇலட்சியங்களாகக் கொண்டு அவற்றினை மேம்படுத்த ஓயாது உழைத்தவரும், காரை மண்ணின்ஒப்பற்ற சேவையாளருமான அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவினைகாரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா நடாத்துவதையிட்டு நாம் எல்லோரும்பெருமிதம் அடைகிறோம்.
அன்னாரின் பணியினை அனைத்து காரை மக்களும் தொடர்ந்து பேணுவார்கள் என்பதில் ஐயமில்லை.ஏனெனில் இவரின் பணிகள் காரைநகரை எல்லோரும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு கொண்டுசென்றதென்றால் அது மிகையாகாது. அன்னாரின் அளப்பெரிய பணிகளை இந்த நூற்றாண்டு விழாமூலம் மீண்டும் மீட்டிப் பார்ப்பதற்கு வழிசமைத்த காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா நிர்வாகத்தினரின் இந்த முயற்சி எல்லோராலும் பாராட்டப்பட வேண்டியதே!
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தில் பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் தனது வாழ்த்துச்செய்தியினை பகிர்ந்து கொண்டு இந்த விழா சிறப்புற அமைய பிரித்தானிய வாழ் காரை மக்கள்மற்றும் காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் சார்பில் மனதார வாழ்த்துகிறோம்.
நன்றி.
நிர்வாகம்
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்
No Responses to “கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்புற் பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம் வாழ்த்து”