Yarl Geek Challenge 5 Juniors போட்டியில் தீவக வலயத்தில் எமது பாடசாலையின் 3 அணிகள் வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளன.
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உலகில் வடபுலத்தை ஓர் அடையாளமாக மாற்றும் பாதையில் Yarl IT Hub இனால் நடத்தப்பட்டு வரும் Yarl Geek Challenge 5 Juniors போட்டிக்கான வலயமட்டப் போட்டிகள் 2016.06.11 அன்று வேலணையில் அமைந்துள்ள கணணி வள நிலையத்தில் இடம்பெற்றது.
அப் போட்டியில் தீவக வலயத்தில் எமது பாடசாலையின் 3 அணிகள் தீவக வலய மட்டத்தில் வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளன.
போட்டியில் வெற்றி பெற்றுள்ள மாணவர் விபரம் வருமாறு:
இப்போட்டியில் பங்கு பற்றுவதற்கான வழிகாட்யாக இருந்து ஊக்குவித்த தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்துறை ஆசிரியை திருமதி சிவாஜினி லக்ஸ்மன் அவர்களுக்கும், பௌதீக விஞ்ஞானத் துறை ஆசிரியர்தி ரு முத்துத்தம்பி ஜெயானந்தன் அவர்களுக்கும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை எமது பாராட்டுகளைத் தெரிவிப்பதுடன் மாகாண மட்டத்தில் வெற்றி பெற வாழ்த்துகின்றது.
No Responses to “காரை இந்துவின் மூன்று அணிகள் Yarl Geek Challenge 5 Juniors போட்டியில் மாகாண மட்டத்திற்கு தெரிவு”