எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து 60 மாணவர்கள் வரை தோற்றவுள்ளனர். இவர்களின் பெறுபேற்றினை உயர்த்தும் வகையில் பாடசாலை நேரத்திற்குப் பின்னர் முற்பகல் 1.30 மணி முதல் 3.30 மணி வரை மேலதிக வகுப்புக்கள் சென்ற 09-01-2023 தொடக்கம் நடாத்தப்பட்டு வருகிறது.
கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் முயற்சியினால் ஆசிரியர்களின் பூரண ஒத்துழைப்புடனும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவியுடனும் தமிழ், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் உள்ளிட்ட முக்கியமான பாடங்களில் இம்மேலதிக வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன.
பாடசாலை நேரத்தின் பின்னர் மாணவர்கள் நின்று இம்மேலதிக வகுப்புக்களில் கலந்துகொள்வதால் அவர்களிற்கான மதிய உணவு வழங்குவதற்கு உதவுமாறு அதிபரின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு பரீட்சை நடைபெறும் வரை உள்ள நான்கு மாத காலத்திற்கும் மதிய உணவு வழங்குவதற்கான உதவியினை வழங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை முன்வந்துள்ளது. முதலாவது மாதத்திற்கு மதிய உணவு வழங்குவதற்கான அனுசரணையினை பழைய மாணவர் சங்கத்தின் உதவிச் செயலாளரான திரு.சிற்றம்பலம் சச்சிதானந்தன் அவர்கள் முன்வந்து வழங்கியுள்ளார்கள்.
மிகுதியாக உள்ள மூன்று மாதங்களிற்கும் மதிய உணவு வழங்குவதற்கு அனுசரணை வழங்கி உதவ விரும்புவோர் வரவேற்கப்படுகின்றனர்.
குறித்த மேலதிக வகுப்புக்களை நடாத்த ஏற்பாடு செய்த அதிபர் திரு.அ. ஜெகதீஸ்வரன் அவர்களையும் இவ்வகுப்புக்களில் அர்ப்பணிப்பு உணர்வோடு சேவையாற்றி வருகின்ற ஆசிரிய மணிகளையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதுடன் முதல் மாதத்திற்கான அனுசரணையினை வழங்கி உதவும் திரு.சிற்றம்பலம் சச்சிதானந்தன் அவர்களின் செயலையும் பாராட்டி நன்றி கூறுகிறது.
மேலதிக வகுப்புச் செயற்பாடு தொடங்கப்பெற்ற முதலாவது தினத்தின்போது எடுக்கப்பட்ட சில படங்களும், அதிபரினால் நன்றி தெரிவித்து அனுப்பப்பட்ட கடிதமும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களிற்கான மேலதிக வகுப்புக்கள் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவியுடன் நடாத்தப்பட்டு வருகிறது.”