19.01.2023 அன்று காரை.இந்துவில் புத்தாக்குனர் கழகத்தினால் ஏற்பாடு செய்யபப்பட்ட கண்காட்சி நிகழ்வானது கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் காலை 10 மணியளவில் கல்லூரி அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களினாலும் ஆசிரியர் திரு ச. அரவிந்தன் அவர்களினாலும் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது மாணவர்களினால் உருவாக்கப்பட்ட புத்தாக்க செயற்பாடுகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு மாணவர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது. இச் செயற்பாட்டிற்கான பொறுப்பாசிரியராக திரு மு. ஜெயானந்தன் அவர்கள் செயற்பட்டிருந்தார்.
இக்கண்காட்சியில் தீவகக் கல்வி வலய கல்வி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. S. இந்திரகுமார் அவர்கள் பார்வையிட்டு மாணவர்களை ஊக்குவித்திருந்ததுடன் பொறுப்பாசிரியருக்கு பாராட்டுதலையும் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “காரைநகர் இந்துக் கல்லூரியல் நடைபெற்ற புக்தாக்குனர் கழகக் கண்காட்சி”