2015 ம் கல்வியாண்டிற்கான அதிபரின் பரிசில்தின அறிக்கை – பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன்
இன்றைய நாள் எமது கல்லூரியின் மகத்தான பொன்நாள். கல்விக்கோர் கலங்கரை விளக்கமாய், கலைகளின் இருப்பிடமாய் விளங்கும் நம் கல்லூரி அன்னை நூற்றாண்டினைக் கடந்து, சாதனைகள் பல படைத்து, எழுச்சி கொண்டு இருக்கும் இவ்வேளையில், எம் கல்லூரித் தாயின் பரிசளிப்புத் தினமாகிய இன்று எமது அன்னையின் இதயக் கமலமாய் எழுந்தருளி அருள்பாலிக்கும் மடத்துக்கரை அம்மனின் பாதக்கமலங்களை உளமாரப் பணிந்து வணங்கிக்கொண்டு இவ்வாண்டுக்கான அதிபர் அறிக்கையினைப் பெருமிதத்துடன் உங்கள் அனைவரது முன்னிலையிலும் சமர்ப்பிக்கின்றேன்.
இன்றைய தின நிகழ்வின் முதன்மை விருந்தினராக வருகை தந்திருக்கும் வடக்கு மாகாணத்தின் சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளர் மதிப்பிற்குரிய உயர்திரு திருச்சிற்றம்பலம் விஸ்வரூபன் அவர்களே!
இன்றைய தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் எமது கல்விக் கோட்டத்தின் பணிப்பாளர் மதிப்பிற்குரிய உயர்திரு ஆறுமுகம் குமரேசமூர்த்தி அவர்களே!
கௌரவ விருந்தினராக நிகழ்வைச் சிறப்பிக்க வருகை தந்திருக்கும் எமது கல்லூரியின் முன்னைநாள் அதிபர் மதிப்பிற்குரிய உயர்திரு மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களே!
தீவக வலயக் கல்விப் பணிமனையைச் சார்ந்த கல்வி அதிகாரிகளே,
எமது கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர்களே,
அயற்பாடசாலைகளின் அதிபர்களே, முன்னாள் ஆசிரியர்களே,
எமது பிரதேசத்திலுள்ள நிறுவனங்களின் தலைவர்களே,
பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களே,
பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்களே,
பழைய மாணவர் சங்க உறுப்பினர்களே,
பெற்றோர்களே, நலன் விரும்பிகளே,
எமது கல்லூரியின் ஆசிரியர்களே! கல்விசாரா உத்தியோகத்தர்களே!
அன்புக்குரிய மாணவர்களே!
உங்கள் அனைவரையும் அளவற்ற அன்பும் ஆனந்தப் பெருக்கும் உள்ளத்தில் மலர்ந்திட இருகரம் குவித்து இன்பமாய் வரவேற்கின்றேன்.
பிரதம விருந்தினர் அவர்களே!
வடக்கு மாகாணத்தின் சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளராக விளங்கும் தாங்கள் எமது கல்லூரியின் பரிசளிப்பு விழாவிலே பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பிப்பதானது எமது கல்லூரிக்கும் மாணவ சமூகத்திற்கும் பெருமதிப்பையும் கௌரவத்தையும் வழங்கியிருக்கின்றது. காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட தாங்கள் தரம் 1–5 வரையான கல்வியை யாஃஇலகடி அ.த.க. பாடசாலையிலும் இடைநிலை, உயர்தரக் கல்வியை யாஃஇந்துக் கல்லூரியிலும் கற்றீர்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமானி (உயிரியல்) பட்டத்தைப் பெற்றுக்கொண்டதன் பின் கொழும்பு பல்கலைக்கழகத்தில் திட்டமிடல் அபிவிருத்தி முதுமானிக் கற்கைநெயியை கற்றுள்ளீர்கள்.
2013 காலப்பகுதியில் சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளராக பதவி ஏற்று திறம்பட ஆற்றும் பணியினால் வடமாகாணத்தின் சிறுவர்களிடையே களையப்பட வேண்டியவற்றையும் கட்டியெழுப்ப வேண்டியவற்றையும் குறிப்பாக நன்குணர்ந்து புத்துணர்வுடன் பணியாற்றி வரும் செயற்பாடானது உண்மையில் போற்றுதற்குரியதாகவுள்ளது.
பண்பால், அன்பால், ஆளுமையால், ஆற்றலால் உயர்ந்து நிற்கும் தங்களின் வருகையால் இக்கல்லூரி பெருமை பெறுவதோடு தங்கள் அன்புக் கரத்தால் பரிசில்களைப் பெற்றுக்கொள்ளும் கல்லூரி மாணவர்களும் பாக்கியசாலிகளாகின்றனர்.
சிறப்பு விருந்தினர் அவர்களே!
காரைநகர் கோட்டத்தின் பணிப்பாளராக விளங்கும் தாங்கள் பாடசாலைக் கல்வியை யாஃ யாழ்ற்ரன் கல்லூரியில் கற்றுத் தேறியதன் விளைவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமானிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு ஆசிரியப் பணியில் காலடி வைத்த தாங்கள் தொழில்சார் தகமையைப் பெற்றுக்கொள்ளும் முகமாக காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுமானிக் கற்கையினையும் தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டப்பின் டிப்ளோமாப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமானிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டீர்கள்.
1998 இல் வியாவில் சைவ வித்தியாசாலையில் அதிபர் பணியில் கால்பதித்தீர்கள். போர்க்காலச் சூழ்நிலைக்குள்ளும் இடப்பெயர்வுகளுக்கு மத்தியிலும் சளையாது பொறுப்பேற்றுக்கொண்டு பாடசாலையின் வளர்ச்சியில் அதி அக்கறை கொண்டு உழைத்தமையை யாரும் மறந்துவிட முடியாது. தொடர்ந்து எமது கல்லூhயில் 2008 இலிருந்து 2010 வரை பணியாற்றி மேலும் யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய பாடசாலைகளிலும் பணியாற்றியுள்ளீர்கள்.
2016ம் ஆண்டு முதல் எமது கோட்டப் பாடசாலைகளின் வளர்ச்சிப் போக்கில் உள்ள தடங்கல்களை இனங்கண்டு அவற்றை தவிர்த்து புதிய பரிமாணங்களுடன் வளர்ச்சியடைய ஆலோசனைகளும் அறிவூட்டல்களும் வழங்கி வருகின்றீர்கள்.
தங்களின் கல்வியியல் சார்ந்த பயணத்தின் பயனுள்ள அனுபவக் கிடக்கைகளுடன் இன்றைய சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கும் செயலால் மனமகிழ்ச்சியடைகின்றோம்.
கௌரவ விருந்தினர் அவர்களே!
காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட தாங்கள் 1968ஆம் ஆண்டில் பண்டிதர் பட்டத்தைப் பெற்றுக்கொண்டீர்கள். 1978 – 1992 வரை எமது கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றி 1993 – 1997 வரை உப அதிபராகவும் 1998 – 2005 வரை அதிபராகவும் இருந்து கல்விக்காக தமது சேவைகளை சிறந்த முறையில் நிறைவேற்றினீர்கள். மேலும் பழைய மாணவர் சங்கச் செயலாளராக இருந்த காலப்பகுதியில் இக் கல்லூரியின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் 1990 களில் இடம்பெயர்ந்த காலத்திலும் காரைநகர்ப் பிள்ளைகளின் கல்விக்காக சிறந்த பணியாற்றியதுடன் இளைப்பாறிய பின்னும் தமது சேவையை வழங்கிவருவது கல்விச் சேவையில் அவர் இன்னமும் இளைப்பாறவில்லை என்பைத எடுத்துக்காட்டுகின்றது.
கலைத்திட்ட அமுலாக்கம்
கலைத்திட்ட அமுலாக்கம் மாணவர்களின் இலக்கான கல்வி அடைவினை உயர்த்தும் பொருட்டு பல்வேறு அன்றாடச் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வழமையான நேர அட்டவணைகளுக்குப் புறம்பாக பொதுப் பரீட்சை எடுக்கும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகள், அலகுப் பரீட்சைகள் என்பன நடைபெறுகின்றன. ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக் காரணமாக பாடசாலைச் செயற்பாடுகளின் இதயமாகத் திகழும் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் உயிர்த்துடிப்புள்ளனவாகவும் வினைத்திறன் மிக்கதாகவும், பண்புசார் விருத்தியுள்ளனவாகவும் அமைந்துள்ளன. கற்றல் செயற்பாடுகளை முனைப்புடன் முன்னெடுத்துச் செல்லும் எமது ஆசிரியர் குழாத்திற்கு எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன்.
மாணவர்களின் விபரங்கள்
தரம் 06 – 09 287
தரம் 10 – 11 185
தரம் 12 – 13 089
மொத்த மாணவர்கள் 561
ஆசிரியர் விபரங்கள்
முதுதத்துவமானி 02
முதுவிஞ்ஞானமானி 01
முதுகல்விமானி 01
முதுகலைமானி 02
கலைமானி 11
விஞ்ஞானமானி 07
வணிகமானி 04
நுண்கலைமானி 06
தேசிய கல்வியியல் டிப்ளோமா ஆசிரியர்கள் 11
விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் 04
பதவியுயர்வு பெற்ற ஆசிரியர்கள்
எமது கல்லூரியில் வரலாறு பாட ஆசிரியராக கடமையாற்றிய திருமதி பிரபாலினி தனம் அவர்கள் சிறந்த வரலாறு பாட ஆசிரியராக மட்டுமல்லாது பல்வேறு போட்டிகளுக்கு மாணவர்களை தயார்ப்படுத்திய சிறப்பிற்குரியவர். இவரது திறமையினால் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை வரலாறு பாட விரிவுரையாளராக பதவியுயர்வு பெற்றுச் சென்றுள்ளார். அவர் மேலும் பல உயர் பதவிகள் பெற்றுச் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றேன்.
2015ஆம் ஆண்டில் எமது கல்லூரி ஆசிரியர்களான திருமதி உசா சுரேந்திரன், திருமதி தயாளினி ஜெயக்குமார், திருமதி சிவந்தினி வாகீசன், திருமதி சங்கீதா பிரதீபன், திருமதி அகிலபானு ராஜ்குமார் ஆகிய ஆசிரியர்கள் தமது தொழில் தகைமையைப் பெற்றுக்கொண்டார்கள். இவர்களையும் இச் சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.
இடமாற்றம் பெற்றுச்சென்றவர்கள்
திருமதி உசா சுரேந்திரன், திருமதி பத்மினி சசிதரன், திருமதி தாரணி ஜெகன்நாதன், திருமதி ச. தியோஜினஸ், செல்வி சித்ரூபா சின்னையா, திரு பா. செந்தில்குமரன், திருமதி கௌசிகா மதனகோபன், திருமதி சந்திரகலா தவசீலன், திரு தெ. பிரபாகரன் ஆகிய ஆசிரியர்களும் கல்விசாரா ஊழியர் திரு ஆ. தியாகலிங்கமும் இடமாற்றம் பெற்று வேறு பாடசாலைக்கு மாற்றலாகிச் சென்றுள்ளனர். இவர்கள் இப் பாடசாலையில் பணியாற்றிய காலத்தில் அர்ப்பணிப்புடன் மிகச் சிறப்பாக பணியாற்றினார்கள்.
ஆசிரியர் குழாத்தில் புதிதாக இணைந்தோர்
1. திரு ஆ. சிவகுமார்
2. திருமதி பி. சுமதிலா
3. திரு க. குலசேகரன்
4. திருமதி ஜெ. ஜெயந்தினி
5. திருமதி க. சுபத்திரா
6. திரு பா. பாலமுகுந்தன்
7. திருமதி டு.ளு.து. நெல்ஸ்மன்
8. செல்வி ம. டயானா
9. திரு ஞா. கிரிதரன்
இவர்கள் அனைவரையும் வருக வருகவென வரவேற்பதோடு, இக் கல்லூரியில் தங்கள் பணியை அர்ப்பணிப்புடன் ஆற்றுவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.
கல்விசாரா ஊழியர்கள்
திரு மு. சிவனேஸ்வரன் சுகாதாரத் தொழிலாளியாகவும், திரு ம. மயூரன் இரவு நேரக் காவலாளியாகவும், திருமதி பி. குருதர்சினி, திரு க. மாலோன் ஆகியோர் அலுவலக உதவியாளராகவும் கடமையாற்றினர். இவர்களுடன் எமது பாடசாலையின் பழைய மாணவியான செல்வி கு. சோபனா அலுவலக முகாமைத்துவ உதவியாளருக்கான கடமைகளைச் சிறப்பாக ஆற்றிவருகின்றார். செல்வி ஜோ. விம்சியா நூலக உதவியாளராகவும் கடமையாற்றினார். இவர்களுடைய தன்னலமற்ற சேவைகளைப் இச் சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.
மாணவர் அபிவிருத்தி
மாணவர்கள் ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கிட விழுமியக் கல்வியும் மாணவர்களின் பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளை அதிகரிப்பதற்கு மேலதிக வகுப்புக்கள், அலகுப் பரீட்சைகள், தவணைப் பரீட்சைகள் நடாத்தப்படுகின்றன. தரம் 6 – 13 வரையான வகுப்புக்களில் மூன்று தவணைப் பரீட்சைகளிலும் 75% சராசரிக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு ழுpவiஅi உநசவகைiஉயவந வழங்கப்பட்டு உற்சாகமளிக்கப்படுகின்றது.
பௌதீக வளம்
கலைத்திட்ட அமுலாக்கத்தில் மாணவர்கள் இலகுவாகக் கற்பதற்குரிய கவின்நிலை உருவாக்கப்பட்டுள்ளன. பிரார்த்தனை மண்டபம், அழகியற் பாட அறைகள், கணனிப் பிரிவு, விஞ்ஞான ஆய்வுகூடம், மகிந்தோதயா ஆய்வுகூடம், நூலகம், மைதானம் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. விஞ்ஞான ஆய்வுகூடத்தில் வசதிகள் அதிகரிக்கப்பட்டு பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
பாடவிதான செயற்பாடுகள்
2015 இல் கல்வித் திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட நிதியின் மூலம் மாணவர்களுக்கான விசேட செயற்றிட்டங்கள், உள்ளக மேற்பார்வை, ஆலோசனை வழிகாட்டல் கண்காணிப்பு, தொடர் மதிப்பீடு ஆகியவற்றின் விளைவாக, 2015ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரத்தில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் செல்வி குலமதி பாலேந்திரா என்ற மாணவி தீவக வலயத்தில் அதிகூடிய பெறுபேற்றினைப் (7A B C) பெற்றுள்ளதுடன் 43% மாணவர்கள் க.பொ.த உயர்தரம் கற்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் கிறிஸ்தவசமயம், குடியுரிமைக்கல்வி, நாடகமும் அரங்கியலும், நடனம் ஆகிய பாடங்களில் 100% சித்தியையும் தமிழ், சைவசமயம், புவியியல், வணிகமும் கணக்கீடும், சங்கீதம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் 80மூ க்கு மேற்பட்ட சித்தியையும் பெற்றுள்ளனர். 2015ம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் செல்வி றோஜனா தேவராசா 2A C பெறுபேற்றினைப் பெற்றுள்ளதுடன் 63% மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறத் தகுதி பெற்றுள்ளார்கள். கலை, வர்த்தக, கணிதத் துறைகளிலிருந்து தோற்றிய பாடங்களில் பௌதீகவியல், உயிரியல், வரலாறு, இந்துநாகரிகம், சித்திரம், நடனம், சங்கீதம், நாடகமும் அரங்கியலும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் 100% சித்தியைப் பெற்றுள்ளனர். இவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்களை இச் சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.
இணைப்பாடவிதான செயற்பாடுகள்
விளையாட்டுத்துறை
2015ம் கல்வியாண்டிற்குரிய விளையாட்டுப் போட்டி 14.02.2015 அன்று பி.ப 1.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. வடமாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திரு ஆ. இராதாகிருஸ்ணன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். இல்லங்களுக்கிடையே வலைப்பந்து, கிரிக்கெட் ஆகிய பிரதான விளையாட்டுக்களும் நடாத்தப்பட்டன. இப் போட்டியில் தியாகராஜா இல்லம் சம்பியனைப் பெற்றுக்கொண்டது.
உதைபந்தாட்டம், கரப்பந்து, வலைப்பந்து, கபடி, சதுரங்கம், எல்லே போன்ற பெருவிளையாட்டுக்களிலும் மெய்வல்லுநர் நிகழ்வுகளிலும் கோட்ட, வலய, மாகாண நிழைலமைகளை தனதாக்கிக் கொண்டுள்ளது. இவ் விளையாட்டுப் பொறுப்பாசிரியர் திரு ஐ. அன்ரன் விமலதாஸ் அவர்களை இக் கல்லூரிச் சமூகம் நன்றியுடன் நினைவுகூறுகின்றது.
அழகியற் துறை
கல்விச் செயற்பாட்டிலே அழகியற் பிரிவுகள் மிகச் சிறப்பாக இயங்கிவருகின்றன. மாணவர்கள் விருப்பத்துடன் இப் பாடத்தினைக் கற்கின்றனர். இதன் வெளிப்பாடாக க.பொ.த சாதாரண தர, உயர்தரத்தில் 100% சித்தியினைப் பெற்றுள்ளனர். சங்கீத, நடன ஆசிரியர்கள் இணைந்து பல அரச சார்புள்ள, அரச சார்பற்ற நிறுவனங்களாலும் நடாத்தப்படும் மாகாண, தேசிய மட்டப் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்து வெற்றிபெற்றுள்ளனர்.
மாணவர் மன்றங்களின் செயற்பாடுகள்
இந்துமா மன்றம்
எமது கல்லூரியில் நீண்டகாலமாக செயலாற்றிக் கொண்டிருக்கும் இம் மன்றமானது மாணவர்களிடையே ஆன்மீக செயற்பாடுகளை முன்னெடுத்து வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றது. இந்துமா மன்றத்தினால் சைவசமய நிகழ்ச்சிகளில் நவராத்திரி விழாவும் வாணி விழாவிள் போது சமய அறிவை மேலும் வளர்க்கும் நோக்கில் பல போட்டிகள் மாணவர்களுக்கு நடாத்தப்பட்டு வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இம் மன்றமானது வெள்ளிக்கிழமை பிரார்த்தனை, நாயன்மார் குருபூசை தினங்கள், தைப்பொங்கல் விழா, ஆடிப்பிறப்பு போன்றவற்றை விசேடமாக கொண்டாடப்படுகின்றது. ஆலயங்களிலும் நடாத்தப்படும் பஜனை நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றுகின்றது. அத்துடன் சைவபரிபாலன சபை; பரீட்சை, மணிவாசகர் சபை பரீட்சை போன்றவற்றுக்கும் மாணவர்களை நெறிப்படுத்துகின்றனர். இம் மன்றத்தினை சிறப்புடன் நடாத்திச் சென்ற பொறுப்பாசிரியை திருமதி சங்கீதா பிரதீபன் அவர்களுக்கு எமது நன்றிகள்.
உயர்தர மாணவர் மன்றம்
இம் மன்றம் தவணைக்கொரு தடவை கணித, விஞ்ஞான, கலை, வர்த்தக மாணவர்கள் ஒன்றிணைந்து நடாத்தி வருகின்றனர். இம் மன்றத்தில் உயர்தர மாணவர்களின் ஆற்றலும் ஆளுமையும் வெளிக்கொண்டு வரப்படுகின்றது. இம் மாணவர்களிடையே பரஸ்பர புரிந்துணர்வுகள் நட்பினை வளர்த்ததோடு வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வினை நடாத்தி தமக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் சகோதரப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களையும் ஒன்றினைத்து ஒன்றுகூடல் வைபவம் இடம்பெற்றது. தமது ஆக்கங்களை ஒன்றினைத்து “நதி” என்ற சஞ்சிகையினையும் வருடாந்தம் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் 2015ம் ஆண்டுக்கான இம் மன்றத்தின் பொறுப்பாசிரியர்களாக திரு இ. இராஜகோபால், திருமதி த. ஜெயக்குமார் ஆகிய ஆசிரியர்கள் செயற்பட்டனர். இவர்களுக்கு எமது நன்றிகள்.
சுகாதார மன்றம்
இம் மன்றமானது மாணவர்களின் நலன் கருதி சூழலுக்கு நேயமான மனப்பாங்கை மாணவர்களுக்கு வளர்த்தற் பொருட்டு பாடசாலை சுற்றுப்புறச் சூழலை தூய்மை செய்வதுடன் நோய்கள் ஏற்படாத வகையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டும் சுற்றாடல் தினத்தன்று வழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தியும் வருகின்றது. இம் மன்றத்தின் பொறுப்பாசிரியரான திரு ஐ அன்ரன் விமலதாஸ் அவர்களுக்கு எனது நன்றிகள்.
இவற்றைவிட கவின்கலை மன்றம், கணித விஞ்ஞான மன்றம், சமூக விஞ்ஞான மன்றம், ஆங்கில மன்றம், வணிக மன்றம் ஆகிய பல மன்றங்கள் தனித்தனியாக செயற்படுவதுடன் மாதம் ஒரு தடவை என்ற வகையில் சிரேஸ்ட பிரிவு வியாழக்கிழமைகளிலும், கனிஸ்ட பிரிவு வெள்ளிக்கிழமைகளிலும் ஒன்றுகூடி அவ்வப் பொறுப்பாசிரியர்களின் நெறிப்படுத்தல்களுக்கமைய மாணவர் ஆளுமை விருத்திச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். தமிழ்த்தினப் போட்டி, கணித வினாடிவினாப் போட்டி, விஞ்ஞான வினாடிவினாப் போட்டி, சமூக விஞ்ஞானப் போட்டி, ஆங்கில தினப் போட்டி, வணிகப் போட்டிகளில் மாணவர்களை கோட்ட, வலய மற்றும் மாகாண மட்டங்களில் பங்குபற்றச் செய்து சாதனைகளைப் புரிந்துள்ளனர்.
விசேட குழுக்கள்
• சுற்றாடல் முன்னோடிக் குழு
இம் மன்றமானது மாணவர்களின் நலன் கருதி சூழலுக்கு நேயமான மனப்பாங்கை மாணவர்களுக்கு வளர்த்தற் பொருட்டு பாடசாலை சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக்கியுள்ளனர். 25 மாணவர்களுடன் உருவாக்கப்பட்ட முதலாவது குழுவினர் மஞ்சள், பச்சை பதக்கங்களுடன் வெள்ளி வர்ணப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர். தற்போது 18 மாணவர்கள் தங்கப் பதக்கத்திற்கான தயார்படுத்தலில் உள்ளனர்.
இரண்டாவது குழு 25 மாணவர்களுடன் மஞ்சள், பச்சை வர்ணப் பதக்கங்களைப் பெற்று வெள்ளிப் பதக்கத்திற்கான தயார்படுத்தலில் உள்ளனர்.
மூன்றாம், நான்காம் குழுக்கள் உருவாக்கப்பட்டு 50 மாணவர்கள் மஞ்சள் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.
பொறுப்பாசிரியர்களான திருமதி சி. வாகீசன், திருமதி அ. இராசசிவம், திருமதி க. சந்திரமோகன், திருமதி பு. கம்சன் ஆகியோரின் சிறப்பான வழிப்படுத்தால் குறுகிய காலத்தினுள் 93 மாணவர்கள் சுற்றாடல் முன்னோடிப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டனர். 2015ம் ஆண்டு உலக சுற்றாடல் தின நிகழ்வில் “பசுமை” என்ற சஞ்சிகையை வெளியிட்டுள்ளனர்.
மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரியில் நிகழ்ந்த பயிற்சிப் பாசறையில் நாடக ஆற்றுகையொன்றையும் குழு 1 மாணவர்கள் மேற்கொண்டிருந்தனர். திண்மக்கழிவு முகாமைத்துவத்தையும் பாடசாலை பசுமை பேணல் நிகழ்ச்சித் திட்டத்தையும் செவ்வனே நிறைவேற்றிவருகின்றனர்.
• சாரணியம்
இம் மன்றம் சமூக ரீதியாகவும் பாடசாலை ரீதியாகவும் சேவையாற்றுவதுடன் சிரமதான பணியினையும் செய்து வருகின்றது. பாடசாலை நிகழ்வுகளின் போதும் பாடசாலைக்கு வெளியேயும் முன்னின்று சேவையாற்றுகின்றனர்.
• சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ்
இக் குழு கல்லூரிக்கு உள்ளேயும் வெளியேயும் முதலுதவி தொடர்பான உதவிகள் அனைத்தும் வழங்கி சமூக சேவை உணர்வினை மாணவர்களுக்கு ஊட்டிவருகின்றது. மேலும் கல்லூரிக்கு வெளியே ஆலயங்களின் திருவிழாக்களில் கலந்து பொதுப் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
• போக்குவரத்து ஒழுங்கமைப்புக் குழு
இக் குழு பொறுப்பாசிரியர்களின் வழிநடத்தலின் கீழ் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர். இதில் இணைந்துகொண்ட மாணவர்கள் பொலிஸ் தலைமையகத்தாலும் ஊர்காவற்றுறைப் பொலிஸ்பிரிவினராலும் போக்குவரத்து ஒழுங்கு விதிமுறை தொடர்பான செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் பாடசாலை ஆரம்பிக்கும் வேளையிலும், பாடசாலை நிறைவுறும் வேளையிலும் வீதியின் இருமருங்கிலும் போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொள்கின்றனர்.
• உற்பத்தித் திறன் குழு
பொறுப்பாசிரியரின் வழிநடத்தலின் கீழ் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர். இவர்கள் பாடசாலையின் உற்பத்தித்திறனை விளைதிறன்மிக்க ஆக்கிக்கொள்ள வகையில் தமது செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.
புலமைப்பரிசில்
எமது கல்லூரியின் மாணவர்கள் பின்வரும் வகையிலான புலமைப்பரிசில் நிதியுதவியைத் தங்கள் கற்றல் நடவடிக்கைகளுக்காகப் பெற்று வருகின்றனர்.
• தரம் 5 புலமைப்பரிசில் நிதி
• ஜனாதிபதி புலமைப்பரிசில் நிதி
• கலாநிதி ஆ. தியாகராஜா புலமைப்பரிசில் நிதி
• சிப்தொற புலமைப்பரிசில் நிதி
பாடசாலை முகாமைத்துவக்குழு
எமது பாடசாலையின் முகாமைத்துவக் குழுவில் அதிபர் உட்பட துறைசார்ந்த ஆசிரியர்கள் இணைந்து சிறப்பான ஒரு கட்டுக்கோப்பையும், ஒழுக்க விழுமியத்தையும் கல்லூரியில் ஏற்படுத்தி வருகின்றனர். அனைத்து கல்விச் செயற்பாடுகள், விளையாட்டுத் துறை போன்ற இணைக்கலைத்திட்டச் செயற்பாடுகள் என்பவற்றையும் நடாத்தி வருகின்றனர். கல்லூரியை மிகத் திறம்பட நடாத்தி மாணவர் அடைவு மட்டங்களை உயர்த்திச் சென்று கல்லூரியில் பல பௌதீகவள அபிவிருத்தி, பாடவிதா அபிவிருத்தி, இணைப்பாடவிதான அபிவிருத்தி என்பவற்றிற்கான இவர்களின் இச் சேவையை ஆற்றிய முகாமைத்துவக் குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
பாடசாலை அபிவிருத்திக் குழு
பதவியதிகாரத்தின்படி தலைவராக அதிபரும், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆகியோர் அங்கத்தவர்களாக உள்ளனர். இவர்கள் பாடசாலைமட்டத் திட்டமிடலை மேற்கொண்டு பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளை சிறந்த முறையில் செயற்படுத்த அங்கீகாரங்களை வழங்குவதுடன் ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றனர். செயலாளர் திரு கு. சரவணபவானந்த சர்மா அவர்கள் மாதாந்தக் கூட்டங்களை ஒழுங்குபடுத்தி பாடசாலையின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிவருகின்றார்.
பழைய மாணவர் சங்கம்
காரைநகர் இந்துக் கல்லூரியினால் பெருமை பெற்ற மாணவர்கள் காரைநகர் முதல் உலகெங்கும் பரம்பி வாழ்கின்றனர். சமூகத்திற்கும் கல்லூரியின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் மேம்பாட்டில் அறிவினை வழங்கி கற்றன ஒழுகுவதற்கு தேவையான பங்களிப்புக்களை தயங்காது தாராளமாக காலத்திற்குக் காலம் தொடர்ச்சியாக வழங்கி வருவதால் எங்கள் கல்லூரிக்கு பெருமை சேர்க்கின்றோம். அதன் மூலம் நாமும் பெருமை பெற்றுக்கொள்கின்றோம்.
மாற்றமுறும் உலக நடைமுறையின் அதிபர், ஆசிரியர்களுடன் இணைந்து கல்லூரியின் உயர்ச்சிக்கு, பாரம்பரியம் பேணுவதற்கு பழைய மாணவர்களின் பங்களிப்பு என்றுமே நிரந்தரமானவை. பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை நடப்பாண்டு பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் கல்லூரியின் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்துள்ளனர். மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு இணைப்பாட செயற்பாடுகளுக்கு பௌதீகவள விருத்திக்கு எமது பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக இணைந்து வழங்கப்பட்ட பங்களிப்புக்காக இச் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு கல்லூரிச் சமூகம் சார்பாக பாராட்டுக்களை தெரிவிப்பதுடன் தொடர்ச்சியாக பழைய மாணவர்களின் பங்களிப்பு கிடைக்கப்பெறுவதற்கும், அவர்களின் இன்ப வாழ்விற்கும் கல்லூரியின் இறைவனின் அருளாட்சி வேண்டி நிற்கின்றோம்.
இணைப்பாடவிதான சாதனைகள்
தேசிய மட்ட சாதனைகள்
போட்டித் தொடர் – அடைந்த இடம்
உற்பத்தித்திறன் தரவலயபோட்டி (ஆசிரியர்கள்) – தகமைச் சான்றிதழ்
தேசியஉற்பத்தித்திறன் போட்டி – விசேடதகமைச் சான்றிதழ்
தேசிய இளைஞர் சேவைமன்றத்தின் போட்டி குழு நடனநிகழ்வு – 3
வலய மட்ட சாதனைகள்
போட்டித் தொடர் பிரிவு அடைந்த இடம்
தனி இசை ஏ 2
தனி இசை ஐஐ 3
குழு இசை ஐ 1
குழு இசை ஐஐ 2
தனிநடனம் ஐஐஐ 3
தனிநடனம் ஐஏ 2
தனிநடனம் ஏ 2
நாடகம் பொது 1
சமூகவிஞ்ஞானப் போட்டி ஐ 3
சமூகவிஞ்ஞானப் போட்டி ஐஐ 2
சமூகவிஞ்ஞானப் போட்டி ஐஏ 1
சமூகவிஞ்ஞானப் போட்டி ஏ 1
சமூகவிஞ்ஞானப் போட்டி ஏஐ 2
நீளம் பாய்தல் 15 வயது 3
நீளம் பாய்தல் 17 வயது 2
100 ஆஓட்டம் 17 வயது 2
800 ஆஓட்டம் 17 வயது 3
முப்பாய்ச்சல் 17 வயது 1
முப்பாய்ச்சல் 17 வயது 3
தட்டெறிதல் 19 வயது 3
200 அஓட்டம் 19 வயது 1
400 ஆஓட்டம் 19 வயது 1
தட்டெறிதல் 17 வயது 1
முப்பாய்ச்சல் 19 வயது 1
குண்டுபோடுதல் 19 வயது 3
400 ஆஓட்டம் 19 வயது 2
400 ஆஓட்டம் 19 வயது 3
1500 ஆஓட்டம் 19 வயது 1
பேச்சு ஏ 1
வாசிப்பு ஐஐ 3
பாவோதல் ஐஐ 2
பேச்சு ஐஏ 3
விவாதம் 1
பாவோதல் ஐஏ 1
பாவோதல் ஐஐஐ 2
கணிதவினாடிவினாப் போட்டி ஐ 2
கணிதவினாடிவினாப் போட்டி ஐஐ 3
கணிதவினாடிவினாப் போட்டி ஏ 2
னுiஉவயவழைn ஐஐ 2
னுiஉவயவழைn ஐஏ 1
னுiஉவயவழைn ஏ 1
னுiஉவயவழைn ஏஐ 1
னுiஉவயவழைn ஏஐஐ 3
ஊழில றசவைiபெ ஐ 3
ஊழில றசவைiபெ ஐஐ 1
ஊழில றசவைiபெ ஏஐஐ 3
ஊழில றசவைiபெ ஏஐஐ 2
ஊசநயவiஎந றசவைiபெ ஏஐ 3
ஊசநயவiஎந றசவைiபெ ஏஐஐ 1
ழுசயவழசல Pசநியசநன ஏஐஐ 2
சுநயனiபெ ஏஐஐ 2
நேறள சநயனiபெ ஏஐஐ 1
வணிகப்போட்டி–கட்டுரை ஐ 2
வணிகப்போட்டி–கட்டுரை ஐஐ 1
வணிகப்போட்டி–கட்டுரை ஐஐஐ 2, 3
வணிகப்போட்டி–குறுவினாவிடை ஐ 1, 2
வணிகப்போட்டி–குறுவினாவிடை ஐஐஐ 1, 2
வணிகப்போட்டி–பேச்சு ஐஐஐ 1, 3
விஞ்ஞானவினாடிவினா ஐஏ 2
விஞ்ஞானவினாடிவினா ஏ 1
பண்ணிசைப் போட்டி–தனி ஐஐஐ 2
பண்ணிசைப் போட்டி– குழு ஐஐஐ 2
சதுரங்கம் 15 வயது 2
சதுரங்;கம் 19வயது 1
கரம் 19வயது 1
சதுரங்கம் 19வயது 1
கரம் 19வயது 2
பூப்பந்தாட்டம் 19வயது 1
பூப்பந்தாட்டம் 15 வயது 1
பூப்பந்தாட்டம் 15 வயது 3
கரப்பந்தாட்டம் 15 வயது 1, 2
கரப்பந்தாட்டம் 17 வயது 3
கரப்பந்தாட்டம் 17 வயது 3
மாவட்ட மட்ட சாதனைகள்
போட்டித் தொடர் பிரிவு அடைந்த இடம்
கலை இலக்கியப் போட்டி–கவிதை ஐ 1
கலாசாரப் போட்டி–தனிநடனம் பொது 3
இளம் பாடகர் பொது 3
அறிவிப்பாளர் பொது 3
சித்திரம் பொது 3, 2
குழு நடனம் பொது 2
மாகாண மட்ட சாதனைகள்
போட்டித் தொடர் – பிரிவு – அடைந்த இடம்
முப்பாய்ச்சல் – 19 வயது – 2
Yarl geek challenge season Soft ware 1
Yarl geek challenge season Hard ware1
மெய்வல்லுநர் திறனாய்வு
வலயமட்டம்
மாணவர் பெயர் நிகழ்ச்சி பிரிவு வலயமட்டம்
சதீஸ்குமார் நீளம்பாய்தல் 15 வயதின் கீழ் ஆண் 3
கா. மயூரன் 100அஇ நீளம் பாய்தல் 17 வயதின் கீழ் ஆண் 2
சி. பிரகாஷ் 800அ 17 வயதின் கீழ் ஆண் 3
முப்பாய்ச்சல் 17 வயதின் கீழ் ஆண் 1
க. கஐந்தன் முப்பாய்ச்சல் 17 வயதின் கீழ் ஆண் 3
பி. பிரதீபன் தட்டெறிதல் 19 வயதின் கீழ் ஆண் 3
சி. கோகுலன் 200அஇ 400அஇ முப்பாய்ச்சல் 19 வயதின் கீழ் ஆண் 1
ரு.மேகலா தட்டெறிதல் 17 வயதின் கீழ் பெண் 1
மு.லாவண்யா முப்பாய்தல் 19 வயதின் கீழ் பெண் 1
குண்டுபோடுதல் 19 வயதின் கீழ் பெண் 3
தே.ரோமிலா 400அ 19 வயதின் கீழ் பெண் 2
ந.யஸ்மினா 400அ 19 வயதின் கீழ் பெண் 3
N.யாழினி 1500அ 19 வயதின் கீழ் பெண் 1
மாகாண மட்டம்
சி. கோகுலன் முப்பாய்ச்சல் 2 ஆம் இடம்
பெருவிளையாட்டுக்கள்
நிகழ்ச்சி பிரிவு வலயமட்டம்
கரம் 15 வயதின் கீழ் பெண் 2
19 வயதின் கீழ் பெண் 1
19 வயதின் கீழ் ஆண் 2
சதுரங்கம் 15 வயதின் கீழ் ஆண் 3
15 வயதின் கீழ் பெண் 1
19 வயதின் கீழ் பெண் 1
19 வயதின் கீழ் ஆண் 1
பூப்பந்தாட்டம் 15 வயதின் கீழ் ஆண் 3
15 வயதின் கீழ் பெண் 1
19 வயதின் கீழ் ஆண் 2
19 வயதின் கீழ் பெண் 2
உதைபந்தாட்டம் 19 வயதின் கீழ் ஆண் 3
கபடி 15 வயதின் கீழ் பெண் 1
19 வயதின் கீழ் ஆண் 2
19 வயதின் கீழ் பெண் 3
கரப்பந்தாட்டம் 15 வயதின் கீழ் ஆண் 2
15 வயதின் கீழ் பெண் 1
17 வயதின் கீழ் ஆண் 3
17 வயதின் கீழ் பெண் 3
விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி
செல்வி தனுஜா தம்பிராசா
தமிழ்த்தினப் போட்டி
நிகழ்ச்சிகள் பிரிவு வலயமட்டம்
இசைதனி ஏ 2
இசை குழு ஐ 1
இசை குழு ஐஐ 2
நடனம் தனி ஐஐஐ 3
நடனம் தனி ஐஏ 2
நடனம் தனி ஏ 2
நாடகம் 1
பேச்சு ஏ 3
வாசிப்பு ஐஐ 3
பாவோதல் ஐஐ 2
பேச்சு ஐஏ 3
விவாதம் திறந்தபோட்டி 1
பாவோதல் ஐஐஐ 2
பாவோதல் ஐஏ 1
கணித வினாடிவினாப் போட்டி–வலயமட்டம்
மாணவர்பெயர் தரம் வலயமட்டம்
ச. தனுஜன் 6 2
வி. கஜந்தினி 7 3
க.டிலக்சனா 10 2
ஆங்கிலதினப் போட்டி
நிகழ்ச்சி;யின் பெயர் தரம் வலயமட்டம்
னுiஉவயவழைn 7 2
9 1
10 1
11 1
12 3
ஊழில றசவைiபெ 6 3
7 1
13 2,3
ஊசநயவiஎந றசவைiபெ 11 3
12 1
ழுசயவழசல Pசநியசநன 12 2
சுநயனiபெ 12 2
நேறள சுநயனiபெ 12 1
சுழடந Pடயல 6 2
8 3
9 3
10 3
11 1
அனர்த்தமுகாமைத்துவப் போட்டி–வலயம்
மாணவர்பெயர் தரம் வலயமட்டம்
சி.விதுசா 12 2
ப. சரண்யா 12 2
வணிகப் போட்டி
நிகழ்ச்சி பிரிவு வலயமட்டம்
கட்டுரை ஐ 2
ஐஐ 1
ஐஐஐ 2,3
குறுவினாவிடை ஐ 1,2
ஐஐஐ 1,2
பேச்சு ஐஐ 1,3
வலயமட்ட விஞ்ஞான விநாடிவினாப் போட்டி
மாணவர்பெயர் தரம் வலயமட்டம்
ச.பிரசன்னசர்மா 10 1
பா.சிவராஜினி 09 2
Yarl Geek Challenge – ICT Competition
நிகழ்வு இடம் மட்டம்
ர்யசனறயசந வுநயஅ டீநளவ ர்யசனறயசந ளுடைஎநச அநனயட மாகாணம்
ளுழகவறயசந வுநயஅ ஆநசவை மாகாணம்
யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட கலாசாரப் போட்டி
நிகழ்வு மாவட்ட மட்டம்
தனிநடனம் 3
இளம்பாடகர் 3
அறிவிப்பாளர் 3
சித்திரம் 2
சித்திரம் 3
குழு நடனம் 2
மாவட்டமட்ட கலை இலக்கியப் போட்டி முடிவுகள்
செல்வி ஞா. துஷாயினி கனிஷ்ட பிரிவு கவிதை எழுதுதல் 1ஆம் இடம்
யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட கலாசாரப் போட்டி
நிகழ்வு இடம் மட்டம்
குழு நடனம் 3 தேசியம்
கல்வி தொடர்பான வாசக ஆக்கப் போட்டி
செல்வி க. சுகந்தினி 1ஆம் இடம்
ஓவியப்போட்டி
மாணவர் பெயர் பிரிவு வலய மட்டம்
ந. சசிகரன் 3 1
மு. டிலக்சன் 3 1
பொதுப் பரீட்சைப் பெறுபேறுகள் – 2015
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை
செல்வி பா. குலமதி 7யுஇ டீஇ ஊ
செல்வன் க. கஜந்தன் 3யுஇ 3டீஇ 2ஊஇ ளு
செல்வன் கி. சிவதர்சன் 3யுஇ 2டீஇ 3ஊஇ ளு
செல்வி கி. பிரியா 3யுஇ 3டீஇ 2ஊஇ ளு
செல்வி இ. லக்சிகா 2யுஇ 3டீஇ 2ஊஇ 2ளு
செல்வன் வி. மதுசங்கர் 2யுஇ 4டீஇ ஊஇ 2ளு
செல்வி கி. அபினோசா 2யுஇ 3டீஇ 3ஊஇ ளு
செல்வி பே. கவிதா 2யுஇ 2டீஇ 3ஊஇ 2ளு
க.பொ.த உயர்தரப் பரீட்சை
செல்வி றோஜனா தேவராசா 2A C வர்த்தகத்துறை
செல்வி கிந்துஜா முடிராசா A B C கலைத்துறை
செல்வி தர்ஜிகா மூர்த்தி A 2C கலைத்துறை
செல்வன் நவரட்னம் லோகதாஸ் 3B கலைத்துறை
செல்வி கஸ்தூரி கோபாலபிள்ளை 2B C வர்த்தகத்துறை
செல்வி சஜிதா பாலசிங்கம் 2B C கலைத்துறை
செல்வி துஸ்யந்தினி அரியபுத்திரன்2B C கலைத்துறை
செல்வி கஜந்தினி நதிசீலன் B 2 C கலைத்துறை
செல்வி கேதினி செல்வராசா B C S கணிதத்துறை
செல்வி சாந்தினி கனகலிங்கம் 3S விஞ்ஞானத்துறை
பாடசாலைத் தேவைகள்
• வகுப்பறையினுள் புறா நுழையாத வகையிலான ஏற்பாடுகள் மேற்கொள்ளல்.
• பாடசாலை வளாகத்தில் பாதுகாப்பு வேலிகள் அமைத்தல்.
• பார்வையாளர் அரங்கம் அமைத்தல்.
• உள்ளக விளையாட்டரங்கம் அமைத்தல்.
2015 ஆம் கல்வியாண்டின் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகள்.
• வலய மட்ட வெளியக மதிப்பீட்டின் அடிப்படையில் 72% பண்புத் தரத்தை அடைந்திருத்தல்.
• வணிகத்துறைக்கு 01 மாணவியும் நுன்கலைத் துறைக்கு 03 மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு நுழைந்தமை.
• தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடாத்தப்பட்ட குழு நடனப் போட்டியில் 08 மாணவர்கள் பங்குபற்றி தேசிய மட்டத்தில் 2ம் இடத்தைப் பெற்றுக்கொண்டமை.
• செல்வி ஆ. அமிர்தா தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடாத்தப்பட்ட போட்டியில் மாகாண மட்ட இளம் பாடகர் போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றியமை.
• செல்வன் க. வினோதன் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடாத்தப்பட்ட போட்டியில் மாகாண மட்ட அறிவிப்பாளர் போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றியமை.
• மாகாணமட்ட Yarl Geek Challenge competition இல் Hard ware அணி Silver medal யும் Hardwareஅணி Merit வென்றமை.
• தேசிய தரவலயப் போட்டியில் ஆசிரியர்கள் பங்குபற்றி தேசிய மட்டத்தில் தகமைச் சான்றிதழ் பெற்றமை.
• தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் பாடசாலை சிறப்புத் தகமைச் சான்றிதழ் பெற்றமை.
இதனடிப்படையில் தேசிய கல்விக் கொள்கைக்கேற்ப சமூக உறவினூடாக பௌதிக, மனித வளங்களை மேம்படுத்தி நவீன தொழில்நுட்பங்களின் ஊடாக தரமான கல்வியை வழங்குவதன் மூலம் ஆளுமைமிக்க மாணவ சமுதாயத்தை உருவாக்கல் எனும் கல்லூரியின் பணிக்கூற்றை நிறைவு செய்யும் பொருட்டான அடித்தளம் பாடசாலையில் உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் கல்லூரியின் தூரநோக்கான நவீன உலகில் ஆளுமைமிக்க சமுதாயம் என்பதன் இலக்குப் பயணம் வெகுதூரம் இல்லை என்பதை எம் கல்லூரிக் குடும்பம் பறைசாற்றி நிற்கின்றது எனும் நற்செய்தியைக் கூறி பரிசில் தின அறிக்கையை நிறைவு செய்கின்றேன்.
நன்றி
திருமதி கலாநிதி சிவநேசன்
பதில் அதிபர்,
யா/காரைநகர் இந்துக் கல்லூரி,
காரைநகர்
No Responses to “2015 ம் கல்வியாண்டிற்கான அதிபரின் பரிசில்தின அறிக்கை – பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன்”