பாராட்டி வாழ்த்துகின்றோம்.
அமரர் தியாகராசா அவர்களின் நூறாவது பிறந்ததின விழா சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின் ஏற்பாட்டில் கொண்டாடுவதையிட்டு எமது கல்லூரிச் சமூகம் சார்ந்த பாராட்டுக்களை முதலில் தெரிவித்துக்கொள்கின்றோம்.
திரு தியாகராசா அவர்கள் காரை இந்துக்கல்லூரியில் கால் நூற்றாண்டு காலம் அதிபராக சேவையாற்றி கல்லூரியை ஓர் உன்னத நிலைக்கு கொண்டுவந்த பெருந்தகை. நிறுவுநர் முத்து சயம்பு அவர்களின் கொள்கைகளை பின்பற்றி மாணவர் ஒழுக்கம்இ கட்டுப்பாடுகளை முதன்மையாக்கியவர்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது ஊர் மீது அதீத பற்றுக்கொண்டு பல்வேறு வகையான சேவைகளை காரைநகருக்கு செய்துஇ கல்லூரியைப்போலவே எமது ஊரினை ஒரு முன்னேற்றகரமான நிலைக்கு கொண்டு வந்தார். திருவாளர் தியாகராசா அவர்களால் காரைநகர் பெருமையடைந்தது. சுவிஸ் காரைஅபிவிருத்திச்சபை எடுக்கும் இவ்விழா புலம் பெயர்ந்து வாழும் அடுத்த பரம்பரையினருக்கு அவரது சேவையை எடுத்துக்காட்டுவதாக அமையும்.
சபையின் செயற்பாடுகள் நன்றி மறவாத் தன்மையையும் பெரியோர்கள் மீதான மதிப்பினையும் எடுத்ததுகாட்டுகின்றது. விழா சிறப்பாக அமைய எல்லாம் வல்ல ஈழத்துச்சிதம்பர ஆண்டிகேணி ஐயனார் திருவருள் முன்னிற்பதாக
திரு.வே.முருகமூர்த்தி
அதிபர்
யாழ்ற்ரன் கல்லூரி காரைநகர்
No Responses to “சுவிஸ் காரை அபிவிருத்தி சபை நடத்தும் கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு யாழ்ற்றன் கல்லூரி சமூகத்தின் வாழ்த்துச் செய்தி”