அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா வாழ்த்துச் செய்தி
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக சுவிஸ் நாட்டில் கொண்டாடுவது ஒரு பெருமைக்குரிய விடயமாகும். அத்துடன் அவரது சேவைகள், பணிகள் தொடர்பான ஒரு கனதியான மலரினையும் வெளியிட முன் வந்தமை பாராட்டுக் குரியதாகும். மேற்படி தங்களது முயற்சியை காரைநகர் அபிவிருத்திச்சபை மகிழ்வுடன் வரவேற்கிறது.
கடந்த இரு வருடங்களாக தாங்கள் நடாத்துகின்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் எமது மாணவர்கள் அவரது சிறப்புகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். காரைநகரில் தோன்றிய பெரியார்களில் முதல் நிலையில் கணிப்பைப் பெறுபவர் அமரர் கலாநிதி ஆ.தியாகராசா என்றால் மிகையொன்றுமில்லை.
17.04.2016 அன்று அவர் 25 வருடங்கள் அதிபராகப் பணியாற்றிய காரைநகர் இந்துக் கல்லூரியில் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கனடாவிலும் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் விழா வெடுத்து தமது நன்றியைத் தெரிவித்தனர். தொடர்ந்து தாங்களும் விழாவெடுத்து ஊர் அபிமானத்தை வெளிப்படுத்துகிறீர்கள்.
காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து அரசியலில் ஈடுபடுவதற்காக ஓய்வு பெற்ற போது காரைநகர் சுற்று வீதியூடாக வாகன பவனியில் அவர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு எல்லா வீடுகளிலும் கும்பம் வைத்து மலர் மாலை சூட்டிக் கௌரவிக்கப்பட்டார். ஆத்தடன் வரலாறு கானாத கூட்டம் அவரது பிரிவுக் காண நிகழ்விலும் கலந்து கொண்டனர்.
காரைநகர் இந்துக் கல்லூரி ஊடாக பல்லாயிரக்கணக்கான மாணவர்களை கல்வியிலும் ஒழுக்கத்திலும் மேம்பாடுடையவர்களாக மாற்றிய சிற்பி அமரர் அவர்கள் அதேபோல பாராளுமன்ற உறுப்பினராக விளங்கிய காலத்திலும் காரைநகரழலட பல அபிவிருத்திகளுக்கு வித்திட்டார். அவரால் ஆரம்பிக்கப்பட்ட காரைநகர் இ.போ.ச சாலை இவ் வருடம் பொன்விழாவைக் காண்கிறது. அரசவேலை வாய்ப்புகளிலும் வட்டுக்கோட்டைத் தொகுதி மக்கள் கணிசமாகத் தெரிலு செய்யப்பட வழி வகுத்தார்.
தனது 65 வயது கடந்த நிலையில் கலாநிதிப் பட்டப் படிப்பை மேற் கொண்டு வெற்றி பெற்றார். இவரது இந்த முயற்சி கல்வியின் பால் இவர் கொண்ட பற்றினையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது.
1981 இல் யாழ் மாவாட்ட பொருளாதார மேம்பாட்டிற்குப் பணிசெய்வதற்காக மாவாட்ட சபைத் தேர்தலில் ஐ.தே.க சார்பில் போட்டியிட முன் வந்த நிலையில் மரணத்தினை அவர் தழுவினார். காரைநகர் வரலாற்றில் அவரது மரண நிகழ்வில் தான் மிகப் பெரும் சனக்கூட்டம் கூடித் தமது கவலையை வெளிப்படுத்தியது.
பொருளியல் நிபுணராக அமரர் அவர்கள் தனது படைப்புகள் மூலமும் பாராளுமன்ற உரைகள் மூலமும் பல பொருளியல் சிந்தனைகளை முன்வைத்துள்ளார். நிறைவேற்றியும் உள்ளார். அவரது வழியில் காரைநகர் மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய சேவைகளைச் செய்வதே அவரது ஆத்மா சாந்தி பெற நாம் செய்யும் கைமாறாகும். அவரது சேவைகழளக் கௌரவித்து இலங்கை அரசு இவ்வாண்டு ஒரு முத்திரை வெளியிட வேண்டம் என்ற கோரிக்கையையும் நாம் முன்வைக்கின்றோம்.
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின் இந்தப் பாரிய முயற்றியைப் பாராடடுவதுடன் விழா சிறப்புற வாழ்த்துகிறேன்.
ப.விக்கினேஸ்வரன்
தலைவர், காரைநகர் அபிவிருத்திச் சபை
No Responses to “சுவிஸ் காரை அபிவிருத்தி சபை நடத்தும் கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு காரை அபிவிருத்தி சபை வாழ்த்து”