வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வில் நீளம் பாய்தல்இ முப்பாய்தல் 400m ஒட்டம் ஆகிய மூன்று போட்டிகளிலும் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவன் செல்வன் சிவசக்திவேல் கோகுலன் வெற்றி பெற்று தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிக்குத் தெரிவாகி கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையேயான மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு 14.07.2016 15..07.2016, 16.07.2016 ஆகிய தினங்களில் யாழ்ப்பாணம் துரையப்பா ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
14.07.2016 அன்று இடம்பெற்ற 21 வயதின் கீழ் ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் செல்வன் சிவசக்திவேல் கோகுலன் 6.48m நீளம் பாய்ந்து 3ம் இடத்தையும். 15.07.2016 அன்று இடம்பெற்ற 21 வயதின் கீழ் ஆண்களுக்கான முப்பாய்தல் போட்டியில் செல்வன் சிவசக்திவேல் கோகுலன் 13.59m நீளம் பாய்ந்து 3ம் இடத்தையும் 16.07.2016 அன்று இடம்பெற்ற 21 வயதின் கீழ் ஆண்களுக்கான 400m போட்டியில் செல்வன் சிவசக்திவேல் கோகுலன் 4ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்திருந்தார்.
செல்வன் கோகுலன் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் நீளம் பாய்தல், முப்பாய்தல், 400m ஆகிய மூன்று நிகழ்வுகளிலும வெற்றி பெற்று தேசிய மட்டத்தில் நடைபெறும் மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்குத் தகுதி பெற்றுள்ளார்.
வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையே கடந்த ஆண்டில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் செல்வன். சி.கோகுலன் 19 வயதிற்குக் கீழ்ப்பட்ட முப்பாய்ச்சல் போட்டியில் 2ஆவது இடம் பெற்று தேசிய மட்டத்திலான போட்டிக்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தகக்கது.
இம்மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று கல்லூரி அன்னைக்குப் பெருமை சேர்த்த செல்வன் சிவசக்திவேல் கோகுலனுக்கும் சகல வழிகளிலும் ஊக்குவித்த விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியரான திரு இன்னாசிமுத்து அன்ரன்விமலதாஸ் அவர்களுக்கும் கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் தமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.
சாதனை மாணவன் செல்வன் சி.கோகுலன் வெற்றிப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வடமாகாண மெய்வல்லுநர் நிகழ்வில் பெற்றுக் கொள்வதைப் படத்தில் காணலாம்.
செல்வன் சிவசக்திவேல் கோகுலன் பெற்ற மாகாண மட்டச் சான்றிதழ்களின் பிரதிகளைக் கீழே காணலாம்.
No Responses to “காரை இந்து மாணவன் செல்வன் சி.கோகுலன் மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் மூன்றில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு”