கனடா ஐக்கிய அமெரிக்க இராச்சியம் ஆகிய நாடுகளில் வதியும்
அன்பார்ந்த காரை இந்துவின் பழைய மாணவர்களே! நலன் விரும்பிகளே!
காரைநகர் இந்துக் கல்லூரியின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க மேம்பாட்டுத் திட்டத்தில்
பங்கேற்பதற்கான அரிய வாய்ப்பு
“அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை” என்கின்ற 250 மில்லியன் ரூபா மதிப்பீட்டிலான எதிர்காலச் சிறார்களுக்கு பெரும் பயனை வழங்கக்கூடிய அரசின் பாரிய உதவித் திட்டம் எமது கல்லூரிக்கும் கிடைத்துள்ளது என்கின்ற உவப்பான செய்தியை தாங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றோம். இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு குறைந்தது 48 பரப்புக் காணி உடனடியாகத் தேவைப்படும் நிலையில் கல்லூரியை அண்மித்த பகுதியில் உள்ள பொருத்தமான காணிகளை இனம்கண்டு அவற்றினை கொள்முதல் செய்வதற்கான முயற்சியில் கல்லூரிச் சமூகம் ஈடுபட்டிருக்கின்றது. இக்காணிகளை கொள்முதல் செய்வதற்கு உதவுமாறு விடுத்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு நிலத்திலும் புலத்திலும் உள்ள அமைப்புக்களும் பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் நன்கொடைகளை தாராள சிந்தையுடனும் கல்லூரி மீதான விசுவாச உணர்வுடனும் வழங்கி வருவதானது, குறித்த திட்டம் நிறைவுசெய்யப்பட்டு அதன் பயனை எமது சிறார்கள் அனுபவிக்கின்ற காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை வெளிப்படுத்துவதாகவுள்ளது.
புழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை, பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளை ஆகியவற்றின் உதவியுடன் கல்லூரிக்கு அணித்தாகவுள்ள 5-1/2 பரப்புக் காணி ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை காணிக் கொள்வனவுக்கு மேலும் உதவும் பொருட்டான நிதி சேகரிப்புத் திட்டத்தினை கனடாவிலும் ஐக்கிய அமெரிக்க இராச்சியத்திலும் வதியும் பழைய மாணவர்கள்இ நலன் விரும்பிகள் மத்தியில் சென்ற மே மாதம் முதல் ஆரம்பித்து செயற்படுத்திவருகின்றது. இத்திட்டம் குறித்த விபரங்களை மின்னஞ்சல் வழியாகவும் தொலைபேசி வழியாகவும் தெரியப்படுத்தி அவர்களது ஆதரவினைப் பெற்று வருகின்றோம். பின்வரும் நான்கு வழிகளில் அவர்கள் தமது ஆதரவினை வழங்கிவருவது எமக்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிப்பதாகவுள்ளது.
1. இயன்றளவு நன்கொடையினை வழங்குதல்
2. நிதியுதவி நிகழ்ச்சியாக செப்ரெம்பர் 17ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ள விஜே ரிவி சுப்பர் சிங்கர் புகழ் சாயி விக்னேஸின் இசைக் கச்சேரிக்கான நுழைவுச் சீட்டொன்றினைப் பெற்றுக்கொள்ளல்
3. நன்கொடையினை வழங்குவதுடன் நுழைவுச் சீட்டொன்றினையும் பெற்றுக்கொள்ளுதல்
4. இசைக் கச்சேரிக்கான அனுசரணையினை வழங்குவதுடன் நன்கொடையினையும் வழங்குதல்
நன்கொடை வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் 250.00 டொலர்களுக்கு மேலான நன்கொடையினை வழங்குபவர்களுக்கு இசைக் கச்சேரிக்கான இலவச நுழைவுச் சீட்டினை வழங்கி வருகின்றோம்.
நன்கொடைகளைப் பெற்றுக்கொள்வதுஇ நிதியுதவி நிகழ்ச்சி ஆகிய இரண்டு முயற்சிகள் ஊடாகவும் முப்பதினாயிரம் (30,000.00) டொலர்களைத் திரட்டி தேவைப்படும் காணியின் ஒரு பகுதிக் கொள்வனவுக்கு உதவுவது என்ற இலக்குடன் எமது சங்கம் செயலாற்றி வருகின்றது.
எமக்கு அறிவையும் ஒழுக்கத்தையும் ஒருங்கே ஊட்டி வளர்த்த காரை இந்து அன்னையின் அரவணைப்பில் இருந்த காலமே எமது வளமான வாழ்வினை நிர்ணயம் செய்வதற்கு வழிகோலியது என்பதை நன்றியுணர்வுடன் நினைவுகூர்ந்து வரலாற்று முக்கியத்துவம் மிக்க கல்லூரிக்கான உதவிப் பணியில் பங்கேற்று வருகின்ற பழைய மாணவர்கள, நலன் விரும்பிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதுடன் தொடர்புத் தகவல்கள் கிடைக்காத நிலையில் இதுவரை எம்மால் தொடர்பு கொள்ளப்படாதவர்கள் இவ்வறிவித்தலைப் பார்வையிட்டதும் தமது உதவிகளை விரைந்து வழங்கி உதவுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டிக்கொள்கின்றோம். எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 15ஆம் திகதியுடன் இந்நிதி சேகரிப்புச் செயற்பாடு நிறுத்தப்படவிருப்பதால் அதற்கு முன்னதாக தங்களது நன்கொடைகளை வழங்கி உதவுவீரகள் என எதிர்பார்க்கின்றோம்.
திட்டம் குறித்த விபரங்களை அறியவும் தமது உதவிகளை வழங்கவும் விரும்புவோர்களுக்கான தொடர்புத் தகவல்கள்:
தொலைபேசி இலக்கங்கள்: (647)532-6217, (416)804-0587, (647)639-2930
மின்னஞ்சல் முகவரி: karaihinducanad@gmail.com
தாங்கள் வழங்கத் தீர்மானிக்கும் நன்கொடையினை மேற்குறித்த தொலைபேசி இலக்கங்களுள் ஒன்றுடன் அல்லது மேற்குறித்த மின்னஞ்சல் முகவரியூடாக தொடர்புகொண்டு அறியத்தந்தால் அதனைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் தங்களுடன் கலந்துரையாடி மேற்கொள்ளப்படும்.
கடன் அட்டையை(Credit Card) பயன்படுத்தி PAY PAL வழியாக நன்கொடையினை வழங்க விரும்புவோர் கீழே உள்ள இணைப்பினை அழுத்துவதன் மூலம் வழங்கிக்கொள்ளமுடியும்.
பழைய மாணவர் சங்கம் – கனடா
No Responses to “காரைநகர் இந்துக் கல்லூரியின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க மேம்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்பதற்கான அரிய வாய்ப்பு”