தேசிய சிறுவர் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு புற்றுநோய் தடுப்புத் தொடர்பான சுவரொட்டி வடிவமைப்புப் போட்டியில் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவன் செல்வன் புலேந்திரன் கஜீபன் மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளார்.
சிறுவர் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் தேசிய புற்று நோய் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சுடன் இணைந்து சுவரொட்டி வடிவமைப்புப் போட்டி நாடாளவிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்டது. “புற்றுநோய் தடுப்பு” எனும் கருப்பொருளில் முதுநிலைப் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட மேற்படி போட்டி 11.07.2016 அன்று நடைபெற்றது.
இப் போட்டியில் காரை இந்து மாணவன் செல்வன் புலேந்திரன் கஜீபன் பங்குபற்றி யாழ்ப்பாண மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடத்தினைப் பெற்றுக்கொண்டார். மேற்படி மாணவனுக்குரிய பரிசில் தின நிகழ்வு 06.08.2016 அன்று கொழும்பு பொது நூல்நிலையத்தில் காலை 9.00 மணிக்கு கௌரவ சுகாதாரஇ போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்தின தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன் செல்வன் புலேந்திரன் கஜீபனையும், மாணவனை சகல வழிகளிலும் ஊக்குவித்த கல்லூரியின் ஓவிப்பாடத்துறை ஆசிரியரான திரு இராசரத்தினம் ஜீவராஜ் அவர்களையும் கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துகின்றது.
செல்வன் புலேந்திரன் கஜீபன் பெற்றுக்கொண்ட வெற்றிக்கேடயம், சான்றிதழ் ஆகியவற்றின் பிரதியை கீழே காணலாம்.
No Responses to “தேசிய சிறுவர் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற சுவரொட்டிப் போட்டியில் காரை இந்து மாணவன் மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடம்”