காரைநகர் மாப்பாணவூரியைச் சேர்ந்தவரும் காரை.இந்துவின் பழைய மாணவனும் ஐக்கிய அமெரிக்காவில் பொறியியலாளராக பணியாற்றி வருபவரும் காரை.இந்துவின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையுடன் தொடர்பிலிருந்து பல்வேறு உதவிகளை வழங்கி வருபவருமாகிய திரு பாலசுப்பிரமணியம் மகேஸ்வரன் அவர்களின் முழுமையான நிதிப் பங்களிப்புடன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து காரை.இந்துவில் கற்று வருகின்ற 36 மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கான மாதாந்த உதவி வழங்கும் திட்டம் சென்ற ஆண்டு செப்ரெம்பர் மாதம் தொடக்கி வைக்கப்பட்டிருந்தது.
இத்திட்டத்தின் 2ம் கட்டமாக மாணவர்களிற்கான மாதாந்த உதவு தொகையை வழங்கும் நிகழ்வானது கல்லூரியின் நடராஜா மண்டபத்தில் 30.03.2023 அன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் விருந்தினராக திரு பா. மகேஸ்வரன் அவர்களின் விஞ்ஞான பாட ஆசிரியரும் ஓய்வுநிலை கிராம சேவை அலுவலருமாகிய திரு இ. திருப்புகழூர்சிங்கம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். இவருடன் கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன், பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.
36 மாணவர்களுக்கு இவ்வருட தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களிற்கான உதவு தொகையினை திரு பா. மகேஸ்வரன் அவர்களின் பெற்றோர்களான தந்தையார் திரு. பாலசுப்பிரமணியம் அவர்களும் தாயாரான பழைய மாணவியும் கனடா பழைய மாணவர் சங்க உறுப்பினருமாகிய திருமதி ஜெயமணி பாலசுப்பிரமணியம் அவர்களும் வழங்கி வைத்தார்கள்.
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 36 மாணர்களுடன் தவணை இறுதிப் பரீட்சையில் வகுப்புக்களில் முதலாம் நிலையினைப் பெற்று வருகின்ற மாணவர்களிற்கும் இவ்வுதவி தொகையினை வழங்கிவரும் மகேஸ்வரன் அவர்கள் இவ்விதம் சென்ற தவணை முடிவில் முதலாம் நிலையினைப் பெற்ற இரு மாணவர்களிற்கான உதவு தொகையும் இம்முறை வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உதவு தொகையைப் பெற்றுக்கொண்ட மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவரான திரு பிரபாகரன் என்பவர் பெற்றோர்களின் சார்பில் நன்றிகளைiயும் பாராட்டுக்களையும் தெரிவிக்க நிகழ்வானது சிறப்பாக நிறைவுபெற்றது.
இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில கீழே இணைக்கப்பட்டுள்ள அதே வேளையில் நிகழ்வின் முழுமையான புகைப்படத் தொகுப்பினை கீழே தரப்பட்டுள்ள இணைப்பினை அழுத்திப் பார்வையிடலாம்:
https://photos.app.goo.gl/k4Ao6ZeuAiuhLGWV9
No Responses to “பொறியியலாளர் மகேஸ்வரன் பாலசுப்பிரமணியம் அவர்களின் கற்றலுக்கான உதவித் திட்டத்தின் 2ம் கட்ட உதவி வழங்கி வைக்கப்பட்டது.”