பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவியுடன் ஏழு பரப்புக் காணி காரைநகர் இந்துக் கல்லூரியினால் 2017ஆம் ஆண்டு கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. இக்காணியை கொள்முதல் செய்வதற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பதினெட்டு இலட்சம் ரூபாவினை உதவியிருந்தது. கொள்முதல் செய்யப்பட்ட சிறிது காலத்தின் பின்னர் காரைநகர் முகாம் கடற்படையினர் தமது பாவனைக்காக இக்காணியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தனர்.
தற்போது இக்காணி கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் காரைநகர் முகாம் கட்டளை அதிகாரியினால் காரைநகர் பிரதேச செயலருக்கு கடிதமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. காரைநகர் உதவி பிரதேச செயலாளரான கு.கஜனி அவர்கள் காணி விடுவிக்கப்பட்டமை தொடர்பில் கட்டளை அதிகாரியினால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக காரைநகர் இந்துக் கல்லூரியின் அதிபருக்கு கடிதமூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
இக்காணியானது வலந்தலைச் சந்திக்கு அண்மையாக மேற்கு வீதியின் வடக்குப் புறமாக அமைந்துள்ளது. (முன்பு காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியர் அமரர் செல்லையா மாஸ்டரின் வதிவிடம் இக்காணியில் அமைந்திருந்தது).
No Responses to “கடற்படையின் பாவனையிலிருந்த காரை.இந்துவிற்குச் சொந்தமான ஏழு பரப்புக் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.”