தமது வர்த்தகப் பணியினாலும் பொதுப் பணியினாலும் S.P.S.என காரைநகர் மக்களால் சிறப்பாக பாடசாலைச் சமூகத்தினால் அழைக்கப்பட்டு வந்தவரான அமரர் S.P.சுப்பிரமணியம் அவர்களின் நூறாவது பிறந்த தினம் இன்றாகும். அமரர் S.P.சுப்பிரமணியம் அவர்கள் எமது கல்லூரிக்கு முன்பாக பாடசாலை உபகரணங்கள, கட்டிட உபகரணங்கள, மருந்தப் பொருட்கள் உள்ளிட்ட பல அவசிய தேவைகளையும் ஒரு கூரையின் கீழ் சிரமங்களின்றி நிறைவு செய்யும் வகையிலான விற்பனை நிலையத்தினை மூன்று தசாப்த காலமாக நடாத்தி வந்தவர் என்பதுடன் பாடசாலையின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் காரைநகர் அரசினர் மருத்துவமனை அபிவிருத்திக்குழு என்பவற்றில் பணியாற்றி அவற்றின் வளர்ச்சியில் பங்காற்றியவர். குறிப்பாக அமரர் தியாகராசா கல்லூரியின் அதிபராக பணியாற்றிய காலகட்டத்தில் அவர் முன்னெடுத்த கல்லூரியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஆதரவாக இருந்து செயலாற்றியவர். தமது வர்த்தகப் பணியுடன் இலங்கை காப்புறிதிக் கூட்டத்தாபனத்தின் முகவராகவும் இருந்து காரைநகர் மக்கள் பலரும் பயனடையும் வகையில் பணியாற்றியவர். ஈழத்துச் சிதம்பரம, மடத்துக்கரை அம்பாள் ஆகிய ஆலயங்களின் வளர்ச்சியில் அக்கறையுடன் பணியாற்றி வந்தவர் என்பதுடன் மடத்துக்கரை அம்பாள் ஆலயத்தின் ஒரு நாள் உற்சவத்தினை தமது குடும்பத்தின் உபயமாக ஏற்று நடாத்தி வந்தவர்.
கனடாவில் வதியும் அன்னாரது மூத்த புதல்வனும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினருமாகிய திரு. அரிகரன் அவர்கள் S.P.S அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கனடா கிளையினூடாக பணப்பரிசிலினை வழங்கி வருகின்றார் என்பதுடன் பழைய மாணவர் சங்கத்தின் பணிகளுக்கு பலவகையிலும் ஆதரவாக இருந்து செயலாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அமரர் சுப்பிரமணியம் அவர்களின் நூறாவது பிறந்த தினத்தில் அன்னாரை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை நினைவு கூர்வதுடன் அன்னாரது பெயரால் முன்னெடுக்கப்படும் கல்லூரி சார்ந்த வளர்ச்சிப் பணிகள் பயனுள்ளதாக அமைந்து அன்னாரின் பெயர் என்றென்றும் நிலைத்து விளங்கவேண்டும் என பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துகின்றது.
No Responses to “S.P.சுப்பிரமணியம் அவர்களின் நூறாவது பிறந்த தினத்தை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை நினைவு கூருகின்றது.”